பிரிக்ஸ் (BRICS) என்பது பிரிக் நாடுகளுடன் தென்னாப்பிரிக்காவையும் சேர்த்து 2010 ல் உதயமாகிய ஐந்து வளரும் நாடுகளின் சர்வதேச கூட்டமைப்பாகும்.

2001 – ஆம் ஆண்டில், பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நான்கு வளர்ந்துவரும் பொருளாதார நாடுகளை விரிக்க கோல்ட்மேன் சாக்ஸ் என்ற சொத்து மேலாண்மை நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான பிரிட்டிஷ் பொருளாதார நிபுனர் ஜிம் ஓ நீல் என்பவர் ‘BRIC’ என்ற வார்த்தையை உருவாக்கினார்.

2009 ஆம் ஆண்டு, பிரிக்ஸ் முதல் மாநாடு ரஷ்யாவில் நடைபெற்றது.

2010 ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்க நாட்டை BRIC அமைப்பில் சேர அழைப்பு விடுத்தபின்னர் இந்த அமைப்பு BRICS என்று உருமாறியது.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீன மக்கள் குடியரசு மற்றும் தென்னாப்பிரிக்கா, 2012ன் படி இதன் உறுப்பு நாடுகளாகும். இந்த நாடுகளெல்லாம் வளரும் நாடுகள் அல்லது புதிதாக தொழில்மயமாகிவருகிற நாடுகளாகும்.

2012ன் படி இந்த ஐந்து நாடுகளின் கூட்டு மக்கள் தொகை உலக மக்கள் தொகையில் பாதியும், கூட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி யுஎஸ்$13.6 ட்ரில்லியனும், மற்றும் அந்நிய செலாவணி கூட்டு கையிருப்பு யுஎஸ்$4 ட்ரில்லியனும் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.