1600 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் நாள் ஆங்கிலேய  கிழக்கிந்திய வணிகக்குழு நிறுவப்பட்டது. இதற்கான அரச பட்டயத்தை இங்கிலாந்து அரசி முதலாம் எலிசபெத் வழங்கினார்.

1613 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் தங்களது முதலாவது வணிக நிலையத்தை சூரத்தில் நிறுவ ஜஹாங்கீர் ஆணை வழங்கினார்.

1770 ஆம் ஆண்டு, ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் வந்திறங்கிய ஆங்கிலேயர் அதனை ஐக்கிய இராச்சியத்துக்கென உரிமை கொண்டாடினர்.

1798 முதல் 1805 முடிய வெல்லஸ்லி பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுநராக பணியாற்றினார்.

1828 முதல் 1835 வரை வில்லியம் பெண்டிங் பிரபு, இந்தியத் தலைமை ஆளுநராகப் பதவியில் இருந்தார்.

1839 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசிற்கும் சீனாவிற்கும் இடையே அபின் போர் நடைபெற்றது. இப்போரில் ஆங்கிலேய படைகள் வெற்றி பெற்றது. இதன் விளைவாக சீனா ஹாங்காங் தீவை நிரந்தரமாக தாரை வார்த்தது.

1840 – ஆம் ஆண்டு, பிரித்தானிய அரசும் மவோரியரும் வைத்தாங்கு உடன்பாட்டை ஏற்படுத்தி நியூசிலாந்தை பிரித்தானியக் குடியேற்ற நாடாக்கினர்.

1848 முதல் 1856 வரை டல்ஹவுசி பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுநராக பணியாற்றினார்.

1850 ஆம் ஆண்டு, ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல், இங்கிலாந்திலுள்ள லண்டனில் பணிபுரிந்தபோது ரஷ்ய பேரரசுக்கும், பிடிட்டஷ் பேரரசுக்கும் இடையெ ஏற்பட்ட போரில் காயமடைந்த வீரர்களுக்காக சேவையாற்றினார்.

1856 முதல் 1862 வரை கானிங் பிரபு, பிரிட்டிஷ் இந்தியாவின் தலைமை ஆளுநராக பணியாற்றினார்.

1858 ஆம் ஆண்டு, கானிங் பிரபு ஆளுநராக இருந்தபொழுது, பிரித்தானிய இந்தியாவின் தலைநகரம் கல்கத்தாவிலிருந்து தில்லிக்கு மாற்றப்பட்டது.

1858 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு இந்திய நிலப்பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வரை, இந்தியாவில் கிழக்கிந்திய வணிகக் குழுவின் ஆட்சியே நடைப்பெற்றது.

1872 ஆம் ஆண்டு, இந்தியாவின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆங்கிலேயரால் நடத்தப்பட்டது.

1880 1884 ஆம் ஆண்டு வரை ரிப்பன் பிரபு இந்தியாவின் வைசிராயாக பணிபுரிந்தார்.

1882 ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் அரசு, இந்தியர்கள் மீது உப்பு வரி விதித்தது.

1899, ஜனவரி, 6 முதல் 1905, நவம்பர், 18, வரை பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுனராக கர்சன் பிரபு பணியாற்றினார்.

1906 ஆம் ஆண்டு. பிரித்தாளும் கொள்கையை பின்பற்றிய ஆங்கிலேய அரசு முஸ்லீம்களின் வேண்டுகோளை ஏற்று தாக்கா நகரைச் சேர்ந்த நவாப் சலிமுல்லாகான் என்பவறது தலைமையில் ‘முஸ்லீம் லீக்’ தோற்றுவிக்கப்பட்டது.

1907, செப்டம்பர், 26 – அன்று நியூசிலாந்து, பிடிட்டிஷ் அரசிடமிருந்து விடுதலை பெற்றது.

1919 ஆம் ஆண்டு இந்திய அரசுச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

1919 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் ரௌலட் சட்டத்தை பிறப்பித்தது. இதன் வழியாக விழிப்புணர்வு ஆவணங்களை வைத்திருப்பது சட்டத்திற்கு புறம்பாக கருதப்பட்டது. காந்தி அவர்கள் இதனை எதிர்த்துப் போராட ஒத்துழையாமை இயக்கத்தை துவங்கினார், இதில் முதலில் இணைந்தவர் சரோஜினி நாயுடு .

1937 – ஆம் ஆண்டு, உலகின் முதல் அவசர தொலைபேசி எண் 999 ஆகும். இது பிரிட்டனில் அறிமுகப்படுத்தப்பட்டது.

1947, ஆகஸ்ட், 14 – அன்று பிரிட்டிஷ் அரசிடமிருந்து பாகிஸ்தான் சுதந்திரமடைந்தது.

1947, ஆகஸ்ட், 15 – அன்று பிரிட்டிஷ் அரசிடமிருந்து இந்தியா சுதந்திரமடைந்தது.

1972 ஆம் ஆண்டு, மே, 22 ஆம் நாள், பிரித்தானிய ஆட்சி முழுமையாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, இலங்கையின் குடியரசு தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இராணுவத்தில் இந்தியப் படை வீர்ர்களுக்கு வழங்கப்பட்ட மிக உயர்ந்த பதவி சுபேதார் ஆகும்.

இந்தியாவில் ஆங்கிலேயர் கட்டிய முதலாவது கோட்டை புனித ஜார்ஜ் கோட்டை ஆகும்.

பிரிட்டிஷ் இந்தியாவின் கோடைகாலத் தலைநகராக சிம்லா இருந்தது.
சிந்து சமவெளி நாகரிகம் (கி.மு. 3000 – கி.மு. 2500)

மகாவீரர் (கி.மு. 599 – கி.மு. 527)

கௌதம புத்தர் (கி.மு. 563 – கி.மு. 483)
கி.பி. 1201 முதல் கி.பி 1500 ஆண்டு வரை


கி.பி. 1501 முதல் கி.பி 1700 ஆண்டு வரை


கி.பி. 1701 முதல் கி.பி 1800 ஆண்டு வரைகி.பி. 1801 முதல் கி.பி 1850 ஆண்டு வரை


கி.பி. 1851 முதல் கி.பி 1900 ஆண்டு வரை


கி.பி. 1901 முதல் கி.பி 1951 ஆண்டு வரை


கி.பி. 1951 முதல்புதிய கற்காலம்


சங்ககால தமிழ் புலவர்கள்

கம்பர் (கி.பி. 12 ஆம் நூற்றாண்டு)