2022, ஏப்ரல், 30 – பிரேசில் நாட்டின் என்காண்ட்டோ நகரத்தில் உலகிலேயே மிக உயரமான சுமார் 141 அடி உயர இயேசு சிலையானது அமைக்கப்பட்து. இச்சிலையானது மலை மீது அமைக்கப்பட்டுள்ளது, மேலும் பாதுகாவலர் ஏசு என்று பெயரிடப்பட்டுள்ளது.
பிரேசில் (Brazil) அல்லது பிரேசில் கூட்டாட்சிக் குடியரசு (Federative Republic of Brazil, தென் அமெரிக்காவில் மிகப் பெரியதும் மிகுந்த மக்கள் தொகை கொண்டதுமான நாடாகும்.
இது பரப்பளவின் அடிப்படையிலும், மக்கள்தொகை அடிப்படையிலும் உலகிலேயே ஐந்தாவது பெரிய நாடு ஆகும்.
இதன் மக்கள்தொகை 192 மில்லியனுக்கும் மேற்பட்டது.
பிரேசிலின் கிழக்கிலும் வடகிழக்கிலும் அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளது.
7,491 கி.மீ. (4,655 மைல்) நீளமான கடற்கரை பிரேசிலுக்கு உண்டு.
தலைநகரம் – பிரேசிலியா
அதிகாரபூர்வ மற்றும் தேசிய மொழி – போர்த்துகீசியம்
அரசாங்கம் – கூட்டாட்சி ஜனாதிபதி அரசியலமைப்புக் குடியரசு
பரப்பளவு – 85,15,767 ச.கி.மீ
நாணயம் – ரியால் (BRL)
தொலைபேசி அழைப்புக் குறியீடு +55
இணையக் குறியீடு .br
பிரேசிலின் அருகாமையில் உருகுவே, அர்ஜென்டினா, பராகுவே, பொலிவியா, பெரு, கொலம்பியா, வெனிசூலா, கயானா, சுரினாம், பிரெஞ்சு கயானா ஆகிய நாடுகள் உள்ளன.
அதாவது, எக்குவடோர், சீலே தவிர அனைத்துத் தென் அமெரிக்க நாடுகளுடனும், பிரேசில் எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ளது.
பல்வேறு தீவுக் கூட்டங்களும் பிரேசிலின் ஆட்சிப் பகுதிக்குள் அடங்குகின்றன.
பெர்னான்டோ டி நோரன்கா, ரோக்காசு அட்டோல், செயின்ட் பீட்டர் மற்றும் செயின்ட் பவுல் தீவுக்கூட்டம், டிரின்டேடும் மார்ட்டிம் வாசும் என்பன இவற்றுட் சில.
பிரேசிலின் தலைநகர் பிரேசிலியா ஆகும்.
சாவோ பாவுலோ, ரியோ தி ஜனைரோ ஆகியவை முக்கிய நகரங்களாகும்.
போர்த்துகீசியரின் ஆட்சியில் முன்பு இருந்ததால் போர்த்துகீச மொழி பிரேசிலில் பேசப்படும் மொழியும், அதிகாரப்பூர்வ மொழியும் ஆகும்.
தென்னமெரிக்காவில் பெரும்பான்மையாகப் போத்துக்கீச மொழியைப் பேசுபவர்களைக் கொண்ட நாடு இது மட்டுமே.
அத்துடன், இம்மொழியைப் பேசுகின்ற உலகின் மிகப் பெரிய நாடும் இதுவே.
1500 ஆம் ஆண்டில் பெட்ரோ ஆல்வாரெசு காப்ரால் பிரேசிலில் கால் வைத்ததிலிருந்து 1815 ஆம் ஆண்டுவரை பிரேசில் போர்த்துக்கல் குடியேற்ற நாடாக இருந்தது.
1815ல் பிரேசில் ஒரு இராச்சியமாகத் தரம் உயர்த்தப்பட்டு, போர்த்துக்கல், பிரேசில், அல்கார்வெசு ஆகியவற்றின் ஐக்கிய இராச்சியம் என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டது.
உண்மையில், 1808 ஆம் ஆண்டில் நெப்போலியன் போர்த்துக்கலைக் கைப்பற்றிக்கொண்டபோது, போர்த்துக்கீசக் குடியேற்றவாதப் பேரரசின் தலைநகரம் லிசுப்பனிலிருந்து இரியோ டி செனீரோவுக்கு மாற்றப்பட்டபோது குடியேற்றவாதப் பிணைப்பு அறுந்துவிட்டது.
1822, செப்டம்பர், 7 – பிரேசில் பேரரசின் உருவாக்கத்துடன் நாடு விடுதலை பெற்றது.
1825, ஆகஸ்ட், 29 – பிரேசில் நாடு அங்கீகாரம் பெற்றது.
இப் பேரரசு அரசியல் சட்ட முடியாட்சியுடன், நாடாளுமன்ற முறையும் சேர்ந்த ஒரு ஒற்றையாட்சி அரசின் கீழ் ஆளப்பட்டது.
1889 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஒரு இராணுவப் புரட்சியைத் தொடர்ந்து, 1889, நவம்பர், 15 அன்று, பிரேசில் சனாதிபதி முறைக் குடியரசு ஆனது.
1988ல், அக்டோபர், 5 – உருவாக்கப்பட்ட அரசியலமைப்பின்படி பிரேசில் ஒரு கூட்டாட்சிக் குடியரசு ஆகும்.
கூட்டாட்சி மாவட்டங்கள் எனப்படும், 26 மாநிலங்களும், 5,564 மாநகரப் பகுதிகளும் இணைந்தே இக்கூட்டாட்சி உருவாக்கப்பட்டு உள்ளது.
பிரேசிலின் பொருளாதாரம், பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் உலகின் ஆறாவது பெரியதும், வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில் ஏழாவது பெரியதும் (2011 ஆம் ஆண்டு நிலை) ஆகும்.
உலகின் விரைவாக வளர்ந்துவரும் முக்கியமான பொருளாதார நாடுகளில் பிரேசிலும் ஒன்று ஆகும்.
ஐக்கிய நாடுகள் அவை, ஜி20, போத்துக்கீச மொழி நாடுகள் சமூகம், இலத்தீன் ஒன்றியம், ஐபீரோ-அமெரிக்க நாடுகள் அமைப்பு, அமெரிக்க நாடுகள் அமைப்பு, தெற்கத்திய பொதுச் சந்தை, தென்னமெரிக்க நாடுகளின் ஒன்றியம் ஆகிய அமைப்புகளின் தொடக்கக்கால உறுப்பினராகப் பிரேசில் உள்ளது.
பெரும்பல்வகைமை நாடுகளில் ஒன்றான பிரேசிலில், பல்வகைக் காட்டுயிர்கள், இயற்கைச் சூழல்கள், பரந்த இயற்கை வளங்கள், பல்வேறுபட்ட காக்கப்பட்ட வாழிடங்கள் என்பன காணப்படுகின்றன.
பிரேசில் இலத்தீன அமெரிக்காவில் மண்டலத்தின் செல்வாக்குள்ள நாடாகவும், பன்னாட்டளவில் நடுத்தர செல்வாக்குள்ள நாடாகவும் விளங்குகிறது.
சில மதிப்பீடாளர்கள் பிரேசிலை உலகளவில் செல்வாக்கு பெருகிவரும் நாடாக அடையாளப்படுத்துகின்றனர்.
பிரேசில் கடந்த 150 ஆண்டுகளாக உலகின் மிக உயர்ந்த காப்பி பயிராக்கும் நாடாக விளங்குகின்றது.
1992 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டில் உள்ள ரியோ-டி-ஜெனிரோவில் சுற்றுச்சூழல் மேம்பாட்டு மாநாடு ஐக்கிய நாடுகள் சபையால் நடத்தப்பட்டது.
7 உலக அதிசயங்களுல் ஒன்றான மீட்பரது கிருஸ்து சிலையானது பிரேசிலில் அமைந்துள்ளது.
அரேபியா ஆசியா ஆன்மீகம் இலக்கணம் உடல்நலம் உணவு உலோகம் ஐசக் நியூட்டன் ஒலிம்பிக் கடன் மோசடி கால்பந்து கிரிக்கெட் சட்டம் சாலைவிதி சிந்தனைகள் சிறுகதை சென்னை செயற்கைக்கோள் ஜெருசலேம் டாலர் டென்னிஸ் தகவல் தொழில்நுட்பம் தமிழர்கள் தமிழ் திருத்தலம் தென் அமெரிக்கா தேர்தல் நகைச்சுவை நாடுகள் நிலா பழமொழி புத்தகம் புத்தர் புற்றுநோய் பெண்கள் பொது அறிவு போர் மருத்துவம் மாநிலம் முக்கிய தினங்கள் வங்கித்தாள் வழக்கு வாக்கெடுப்பு வானியல் விபத்து
உலக நாடுகள்
ஆசியா இந்தியா சீனா நேபாளம் ரஷ்யா ஜப்பான் இலங்கை வங்காள தேசம் மாலத்தீவு இந்தோனேசியா பிலிப்பைன்ஸ் மடகாஸ்கர் பாகிஸ்தான் வியட்நாம் சிங்கப்பூர் கத்தார் மலேசியா துருக்கி பாலஸ்தீனம் தென் கொரியா இஸ்ரேல் சவூதி அரேபியா ஈரான் ஆப்கானிஸ்தான் பூட்டான் ஜோர்டான் தாய்லாந்து ஈராக் UAE கஜகஸ்தான் குவைத் ஐரோப்பா இங்கிலாந்து சுவிட்சர்லாந்து பிரான்ஸ் ஜெர்மனி பின்லாந்து ஸ்வீடன் நார்வே நெதர்லாந்து ஹங்கேரி வாடிகன் சிட்டி ஸ்பெயின் ஆஸ்திரியா அயர்லாந்து இத்தாலி உக்ரைன் டென்மார்க் பெல்ஜியம் போர்த்துக்கல் எஸ்டோனியா […]