1950, ஜனவரி, 26 – அன்று பீகார் மாநிலம் உருவாக்கப்பட்டது.

பிகார் அல்லது பீகார் (Bihar) இந்திய நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலம். இம்மாநிலத்தின் தலைநகர் பாட்னா. வரலாற்றுச் சிறப்பு மிகுந்த பகுதியில் இம்மாநிலம் அமைந்துள்ளது.

பீகார் மாநிலத்தின் மையப்பகுதியில் உள்ள நாளந்தா என்ற பகுதியில் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் குப்தப் பேரரசர் முதலாம் குமாரகுப்தன் ஆட்சிக் காலத்தில் (415 – 455) நாளந்தா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.

2000 – ஆம் ஆண்டில் பீகார் மாநிலத்தின் கனிம வளங்கள் நிறைந்த பகுதிகளை பிரித்து ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப் பட்டது.

மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயல் மற்றும் மத்திய வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் இந்தியாவின் முதல் கிசான் ரெயிலை, மகாராஷ்டிராவின் தேவலாலியில் இருந்து பீகாரின் தனபூர் ரயில் நிலையத்திற்கு சிறப்பு இணைப்பு பார்சல் ரயில் மூலம் வீடியோ இணைப்பு மூலம் கொடியேற்றினர். மாதுளை, வாழைப்பழம், திராட்சை போன்ற பழங்களையும், கேப்சிகம், காலிஃபிளவர் போன்ற காய்கறிகளையும் கொண்டு செல்லும் இந்திய ரயில்வேயின் (ஐஆர்) முதல் பன்முகப் பொருட்கள் ரயில் இதுவாகும். இந்த ரயில் வாரந்தோறும் இயங்கும்.

சமண, புத்த மதங்களின் புண்ணிய பூமி என பீகார் அழைக்கப்படுகிறது.

பீகாரின் துயரம், கோசி நதி ஆகும்.

காந்தி முதன் முதலில் தனது சத்தியாகிரகத்தை பீகார் மாநிலத்தில் தொடங்கினார்.

எழுத்தறிவில் மிகவும் பின்தங்கிய மாநிலம் ஆகும்.

பீகாரின் தலைநகரான பாட்னாவின் பழைய பெயர் பாடலிபுத்திரம் ஆகும்.

டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்கள் பீகாரின் காந்தி என்று அழைக்கப்படுகிறார்.

இந்தியாவில் அதிக அளவு பெண் காவலர்களை கொண்ட மாநிலம் ஆகும்.

2022, பிப்ரவரி, 15 – மாட்டுத்தீவன மோசடி வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் ரூ.139.35 கோடி மதிப்பிலான மற்றொரு தீவன மோசடி வழக்கில் லாலு பிரசாத் குற்றவாளியாக அறிவிப்பு. இதுவரை 4 தீவன மோசடி வழக்குகளில் லாலு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. தற்போது, 5ஆவது தீவன பண மோசடி வழக்கிலும், லாலு பிரசாத் குற்றவாளியாக அறிவித்து ரஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு