புறம் + நான்கு + நூறு = புறநானூறு.
இந்நூலைப் புறப்பாட்டு எனவும் புறம் எனவம் வழங்குவர்.
வெட்சு, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை ஆகிய புறத்திணைகளுக்குரிய துறைப்பொருள்களை அமைந்த 400 பாடல்களை இந்நூல் கொண்டுள்ளதால் புறநானூறு என்று பெயர் பெற்றது.
இந்தூலின் கடவுள் வாழ்த்துப் பாடலை பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியுள்ளார்.
இந்நூலின் படல்கள் பல்வேறு காலத்தில் வாழ்ந்த பல்வேறு புலவர்களால் பாடப்பட்டவையாகும்.
இந்தூலைத் தொகுத்தவர், தொகுப்பித்தவர் பெயர்கள் கிடைக்கப்பெறவில்லை.
முடியுடைய மூவேந்தர்கள், சிற்றரசர்கள், அமைச்சர்கள், சேனைத் தலைவர்கள், வீரர்கள், கடையெழு வள்ளல்கள், கடைச்சங்கப் புலவர்கள் எனப் பலருடைய வரலாற்றுக் குறிப்புகளையும் அக்கால மக்களின் வாழ்க்கை முறை முதலியவற்றையும் இந்தூலால் நன்கு அறியலாம்.
புறநானூற்றின்கண் 11 புறத்திணைகளும் 65 துறைகளும் எடுத்தாளப்பட்டுள்ளன.
வெளிநாட்டவராகிய அறிஞர் ஜி.யு.போப் அவர்களுக்குத் தமிழ் மீது பற்று உண்டாவதற்குக் காரணமான இருந்த நூல்களுல் இப்புறநானூறும் ஒன்றாகும்.
அவ்வறிஞர் புறநானூற்றுப் பால்கள் சிலவற்றை அவ்வப்போது ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.
தமிழரின் உயரிய வாழ்வியல் சிந்தனைகளை கருவூலமாகக் கொண்டு விளங்குவது இந்நூல்.
எட்டுத்தொகை நூல்களுல் ஒன்று ஆகும்.