பெங்களூர், கர்நாடக மாநிலத்தின் தலைநகராகும்.

கர்நாடகாவின் தென்கிழக்கு பகுதியில் தக்காண பீடபூமியில் அமைந்துள்ள இந்நகரம் மக்கள்தொகையின் அடிப்படையில் இந்தியாவின் மூன்றாவது பெருநகரமாகவும் நகர்ப்புற மக்கள்தொகை அடர்த்தியில் ஐந்தாவது பெரியதாகவும் திகழ்கிறது.

நவீன பெங்களூரின் சிற்பியாக பலர் கருதும் முதலாம் கெம்பெ கவுடா இந்த இடத்தில் ஒரு செங்கல்-கலவை கோட்டையைக் கட்டி இதனை விஜயநகர சாம்ராச்சிய பிராந்தியமாக நிறுவிய 1537 ஆம் ஆண்டு முதல் தான் இந்நகரத்தின் நவீன வரலாறானது துவங்குவதாக பலர் கருதுகின்றனர். பிரித்தானிய ஆட்சியின் போது, இது தென்னிந்தியாவில் காலனி ஆட்சி மையமாக ஆனது.

இன்று, ஒரு பெரிய வளரும் பெருநகரமாக, இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற பல கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் தாயகமாக பெங்களூரு திகழ்கிறது. ஏராளமான பொதுத்துறை கனரக தொழிற்சாலைகள், மென்பொருள் நிறுவனங்கள், விண்வெளி, தொலைத்தொடர்பு, மற்றும் பாதுகாப்பு துறை நிறுவனங்கள் இந்நகரில் அமைந்துள்ளன.

தகவல் தொழில்நுட்பத்துறை வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதியில் நாட்டின் முன்னணியில் திகழும் தனது பெருமைமிகு நிலையின் காரணமாக, பெங்களூரு இந்தியாவின் ‘சிலிகான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது.

மக்கள்பரவலில் பன்முகத்தன்மை கொண்டதான பெங்களூரு பெரும் பொருளாதார மையமாகத் திகழ்வதோடு இந்தியாவில் மிகத் துரிதமாய் வளரும் பெரு நகரமாகவும் உள்ளது. 2015ஆம் ஆண்டு பெங்களுரு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இந்தியாவின் பூந்தோட்டம் என்று இந்நகரம் அழைக்கப்படுகிறது.

மேலும் இந்தியாவின் சிலிக்கான் வேலி என்றும் அழைக்கப்படுகிறது.

இந்தியாவின் மிண்ணணு நகரம் என்று பெங்களூர் அழைக்கப்படுகிறது.

இந்தியாவில் முதல் பட்டாம்பூச்சி பூங்கா பெங்களூரில் அமைந்துள்ளது.


இந்திய அரசு


மாநிலங்கள்


யூனியன் பிரதேசங்கள்


முக்கிய நகரங்கள்


இந்திய ஆறுகள்