2022, அக்டோபர், 26 – Dry Dove ஷாம்புவில் அதிகளவு உள்ள பென்சீன் என்ற ரசாயனம், ரத்தப் புற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் டவ் ஷாம்பை திரும்ப பெற யுனிலிவர் நிறுவனம் முடிவு. அக்டோபருக்கு முன்பு தயாரித்த ஷாம்புகள் மட்டும் திரும்ப பெற முடிவு.
பென்சீன் என்பது ஆறு கரிம அணுக்கள் ஒரு வளையம் போல் சேர்ந்து உருவாகும் ஒரு கரிமவேதியியல் சேர்வையாகும்.
இதன் வேதியியல் குறியீடு C6H6 ஆகும். ஐதரசன் மற்றும் கார்பன் அணுக்கள் மட்டுமே இணைந்து பென்சீன் உருவாவதால் இதுவும் ஒரு ஐதரோ கார்பனாகவே கருதப்படுகிறது. இது சுருக்கமாக Ph-H எனவும் குறிக்கப்படுவதுண்டு.
பென்சீன், ஒரு நிறமற்ற, எரியக்கூடிய நீர்மம் (திரவம்). ஒப்பீட்டளவில் உயர்ந்த உருகுநிலையைக் கொண்டது. இது புற்றுநோயைத் தூண்டக்கூடிய தன்மை கொண்டதால், எரிபொருட்களில் இவற்றைச் சேர்ப்பது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனாலும், இது தொழில்துறையில் ஒரு முக்கியமான கரைப்பானாகப் பயன்படுவதுடன், மருந்துப் பொருட்கள், நெகிழிகள், செயற்கை இறப்பர், மற்றும் சாயப் பொருட்களின் உற்பத்தியில் முன்னணிப் பொருளாகவும் உள்ளது. பென்சீன், கச்சா எண்ணெயில் ஒரு சேர்பொருளாக உள்ளது. ஆனாலும், இது பெட்ரோலியப் பொருட்களில் இருக்கும் வேறு சேர்வைகளிலிருந்து செயற்கையாக ஆக்கப்படுகின்றது.
கண்டுபிடிப்பு
பென்சீன் என்ற சொல் பென்சோயின் பிசின் என்ற இத்தாலிய சொல்லிலிருந்து பெறப்பட்டது ஆகும்.
சில நேரங்களில் இது “பெஞ்சமின் பிசின்” அல்லது சாம்பிராணி பிசின் என்றும் அழைக்கப்படுகிறது, பதங்கமாதல் மூலமாக பென்சோயினிலிருந்து ஒரு அமிலத்தன்மை கொண்ட பொருளாக இது வடித்தெடுக்கப்பட்டு பென்சாயின் மலர்கள் அல்லது பென்சாயிக் அமிலம் எனப்பெயர் சூட்டப்பட்டு இறுதியாக பென்சால் அல்லது பென்சீன் என்ற பெயரைப் பெற்றது.
1825 ஆம் ஆண்டு, ஒளியூட்டப்பட்ட எரிவாயுவை உற்பத்தி செய்யும்போது எண்ணெய்பசை கொண்ட ஒரு வீழ்படிவாக மைக்கேல் பாரடே பென்சீனைத் தனிமைப்படுத்தினார்.
ஹைட்ரஜனின் பைகார்புரெட் என்று அதற்கு பெயருமிட்டார்
1833 இல், இலார்டு மிட்செர்லி என்பவர் பென்சாயிக் (பென்சோயின் பிசின்) அமிலம் மற்றும் சுண்ணாம்பை வடிகட்டுதல் வழியாக ஒரு கலவையைத் தயாரித்து அதற்கு பென்சீன் என்ற பெயரைக் கொடுத்தார்.
1836 ஆம் ஆண்டில், பிரஞ்சு வேதியியலாளர் அகஸ்டி லாரெண்ட் என்பவர் இக்கலவைக்கு பீனே என்று பெயரிட்டார்.. ஹைட்ராக்சில் ஏற்றம் பெற்ற பென்சீனான பீனால் சேர்வைக்கும் மற்றும் பென்சீனிலிருந்து தனி ஹைட்ரஜன் அணு பிரித்தெடுப்பு எதிர்வினையின் மூலமாக உருவாகும் பினைல் தனிஉறுப்புக்கும் இப்பெயரே வேர்ச் சொல்லாக அமைந்தது
அரேபியா ஆசியா ஆன்மீகம் இலக்கணம் உடல்நலம் உணவு உலோகம் ஐசக் நியூட்டன் ஒலிம்பிக் கடன் மோசடி கால்பந்து கிரிக்கெட் சட்டம் சாலைவிதி சிந்தனைகள் சிறுகதை சென்னை செயற்கைக்கோள் ஜெருசலேம் டாலர் டென்னிஸ் தகவல் தொழில்நுட்பம் தமிழர்கள் தமிழ் திருத்தலம் தென் அமெரிக்கா தேர்தல் நகைச்சுவை நாடுகள் நிலா பழமொழி புத்தகம் புத்தர் புற்றுநோய் பெண்கள் பொது அறிவு போர் மருத்துவம் மாநிலம் முக்கிய தினங்கள் வங்கித்தாள் வழக்கு வாக்கெடுப்பு வானியல் விபத்து
வேதியியல்
தனிமம் அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் வேதிப்பெயர் நொதியால் பழுப்பாகுதல் pH என்றால் என்ன? அமுக்கப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் வாயுக்கள் நைட்ரஜன் ஹைட்ரஜன் கிரிப்டான் ஆக்ஸிஜன் ஹீலியம் தனிமங்கள் லித்தியம் தங்கம் மக்னீசியம் சேர்மங்கள் சோடியம் கார்பனேட் மீத்தேன் வைரம் நீர் பிளாஸ்டிக் பென்சீன்