பெரியார் – ஈ.வே.இராமசாமிவைக்கம் வீரர் என்று அழைக்கப்பட்டார் பெரியார்.

பெரியாரின் இயற்பெயர் ஈ.வே.இராமசாமி ஆகும்.

சிறைப்பறவை என்று அழைக்கப்படுகிறார்.

பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமி (இயற்பெயர்: ஈ. வெ. இராமசாமி, E.V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 – திசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர்.

1897, செப்டம்பர், 17 – அன்று பிறந்தார்.

தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர்.

இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது.

1925 – ஆம் ஆண்டு, சுய மரியாதை இயக்கம் பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டது.

இவர் வசதியான, முற்பட்ட சாதியாகக் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார்.

இம்மனநிலை வளரக் காரணமானவை மக்களிடையே இருக்கும் மூடநம்பிக்கையும், அந்த மூடநம்பிக்கைக்குக் காரணமாக இருக்கும் கடவுள் நம்பிக்கையும், கடவுள் பெயரால் உருவான சமயங்களும் தான் என்பதை கருத்தில் கொண்டு ஈ. வெ. ரா, தீவிர இறைமறுப்பாளாராக இருந்தார்.

இந்திய ஆரியர்களால், தென்னிந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த திராவிடர்கள் பார்ப்பனரால்லாதார் என்ற ஒரு காரணத்தினால் புறக்கணிக்கப்படுவதையும், அவர்களால் திராவிடர்களின் வாழ்வுச் சுரண்டப்படுவதையும் இராமசாமி எதிர்த்தார்.

அவர் தமிழ்ச் சமூகத்திற்காகச் செய்த புரட்சிகரமான செயல்கள், மண்டிக்கிடந்த சாதிய வேறுபாடுகளைக் குறிப்பிடத்தக்க வகையில் அகற்றியது.

தமிழ் எழுத்துகளின் சீரமைவுக்கு இராமசாமி குறிப்பிடத்தக்கப் பங்காற்றியுள்ளார்.

இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழக அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியவை.

இவர் ஈ.வெ.ரா, ஈ.வெ. இராமசாமி என்ற பெயர்களாலும் தந்தை பெரியார், வைக்கம் வீரர் என்ற பட்டங்களாலும் அறியப்படுகிறார்.

1938, நவம்பர், 13 – அன்று, மெட்ராஸில் நடைபெற்ற தமிழ்நாடு பெண்கள் மாநாட்டில், பெண் விடுதலைப் போராளி ஈ.வெ.ரா-விற்கு ‘பெரியார்’ என பட்டம் சூட்டப்பட்டது.

1944, ஆகஸ்ட், 27 – அன்று, நீதிக்கட்சி கலைக்கப்பட்டு, தந்தை பெரியார் தலைமையில் திராவிடர் கழகம் தோற்றுவிக்கப்பட்டது.

1973, டிசம்பர், 24 – அன்று இறந்தார்.


பெரியார் நடத்திய பத்திரிக்கைகள்

பெரியார் நடத்திய பத்திரிக்கைகள்மொழிஆண்டு
குடியரசுதமிழ்1925
Revoltஆங்கிலம்1928
புரட்சிதமிழ்1933
பகுத்தறிவுதமிழ்1934
விடுதலைதமிழ்1935
உண்மைதமிழ்1970
The Modern Rationalistஆங்கிலம்1971

தந்தை பெரியாரின் சிந்தனைகள்

பகுத்தறிவு பகலவன் என்றழைக்கப்படும் பெரியார், 20 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் தோன்றிய சிறந்த தத்துவ அறிஞராகவும், சிந்தனையாளராகவும் கருதப்படுகிறார்.

சமூக நீதி, சாதி, கடவுள் மறுப்பு, சமூக ஏற்றத் தாழ்வு, பெண் விடுதலை, பெண் கல்வி, விஞ்ஞானம், அரசியல், அறிவியல் என அனைத்து விஷயங்கள் குறித்தும் பெரியார் பேசினார். வயோதிகக் காலத்திலும் ஓய்வெடுக்காமல் தனது சமூகப் பணியை இடைவிடாது தொடர்ந்தார். பெரியாரின் சிந்தனை நீட்சியாகவே தமிழகத்தில் திராவிட கட்சிகள் தோன்றின.

மரணத்திற்குப் பிறகும் தமிழகத்தின் தவிர்க்க முடியாத ஆளுமையாக திகழ்ந்து கொண்டிருக்கும் பெரியாரின் சிந்தனைகள், நூற்றாண்டுகள் கடந்தும் வெளிசத்தைப் பரப்பக்கூடியவை.

அத்தகைய பெரியாரின் சிந்தனைகளில் சில…

  1. யார் சொல்லியிருந்தாலும் எங்கு படித்திருந்தாலும் நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே.
  2. ஒரு காலத்து முறைகளே எக்காலத்துக்கும் என்றால் மனிதனுக்கு அறிவு வளர்ச்சி இல்லை என்பதுதான் பொருள்.
  3. வாழ்க்கை ஒழுக்கத்தில் கணவனுக்கு ஒரு சட்டம் மனைவிக்கு வேறு சட்டம் இருக்கிறது.
  4. என்னை கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்கின்றனர் சிலர், அதில் உண்மையில்லை. நான் நம்பிக்கை வைக்க அப்படி எதுவும் இருப்பதாக புலப்படக் காணோமே என ஏங்குபவன் நான்.
  5. சிந்திப்பவன் மனிதன்; சிந்திக்க மறுப்பவன் மதவாதி; சிந்திக்காதவன் மிருகம்; சிந்திக்கப் பயப்படுகிறவன் கோழை.
  6. மனிதன் பிறந்தநாள் முதற்கொண்டு சாகின்ற வரையில் உலகில் மாணவனாக இருக்கிறான்.
  7. ஓய்வு, சலிப்பு என்பவற்றை தற்கொலை என்றே கருதுகிறேன்.
  8. ஒருவன் தன் தேவைக்கு மேலே எடுத்துக் கொள்ளாவிட்டால் எல்லோருக்கும் வேண்டியவை கிடைத்துவிடும்.
  9. ஆயுதமும் காகிதமும் பூஜை செய்ய அல்ல, புரட்சி செய்ய.