பெருங்கடல் (Ocean)
பெருங்கடல் (ocean) என்பது முக்கியமான உப்பு நீர் நிலை ஆகும். இது நீர்க் கோளத்தின் முக்கியமான கூறும் ஆகும். ஏறத்தாழ 71% புவி மேற்பரப்பு (361 மில்லியன் சதுர கிலோமீட்டர்) தொடர்ச்சியாக அமைந்துள்ள பெருங்கடல்களினால் மூடப்பட்டுள்ளது.
இது பல பெருங்கடல்களாகவும், பல சிறிய கடல்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. பூமியின் மேற்பரப்பில் சுமார் 71% மற்றும் பூமியின் உயிர்க்கோளத்தில் 90% அடங்கியது கடல் ஆகும்.[1] புவியில் உள்ள நீரில் 97% கடலில் உள்ளது, மேலும் கடல்சார் அறிஞர்கள் உலக சமுத்திரத்தில் 5% க்கும் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
புவியின் கடலானது ஏறக்குறைய 3,700 மீட்டர் (12,100 அடி) சராசரி ஆழத்துடன், 1.35 பில்லியன் கனசதுர கிலோமீட்டர் (320 மில்லியன் க்யூ) நீரைக் கொண்டது ஆகும்.
இதன் பரப்பளவின் அரைப் பகுதிக்கு மேல் 3,000 மீட்டருக்கு (9,800 அடி) மேற்பட்ட ஆழம் கொண்டது. சராசரி உப்புத்தன்மை ஆயிரத்தில் 35 பகுதி (35%) ஆகும். பொதுவாக முழுக் கடல்நீரும் சராசரியாக ஆயிரத்துக்கு 30 – 38 பகுதிகள் உப்புத்தன்மை கொண்டது.
பூமியின் உயிர்கோலத்தில் உலகப் பெருங்கடல்கள் முக்கிய அங்கமாக இருப்பதால், இது அனைத்து காலங்களிலிலும், கார்பன் சுழற்சியின் பகுதிகள், காலநிலை மற்றும் வானிலை போன்றை பாதிக்கிறது.
உலக சமுத்திரத்தில் 230,000 அறியப்பட்ட உயிர் இனங்கள் உள்ளன, ஆனால் பெரும்பாலானவற்றை கண்டுபிடிக்க முடியாததால், இருபது மில்லியனுக்கும் அதிகமான உயிரினங்கள் உள்ளதாக கருதப்படுகிறது. பூமியின் பெருங்கடலின் தோற்றம் குறித்து தெரியவில்லை; ஹேடான் காலத்தில் உருவாகிய சமுத்திரங்கள், உயிரின் வெளிப்பாட்டிற்கு உந்துதலாக இருந்திருக்கலாம்.
சூரிய மண்டலத்தில் மற்ற இடங்களில் சமுத்திரங்கள் இருப்பதற்கான சான்றுகள் உள்ளன இருப்பினும், புவிக்கு வெளியே உறுதிப்படுத்தப்பட்ட ஒரே நீர்மக் கடல் சனி கோலின் துணைக்கோலான டைட்டனில் உள்ள பெரிய டைட்டானின் ஏரிகள் ஆகும். புவியியல் வரலாறுகளின்படி துவக்கத்தில், செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகியவை பெரிய நீர் சமுத்திரங்களைக் கொண்டிருந்ததாக கோட்பாட்டு உள்ளது.
செவ்வாயில் கடல் குறித்த கருதுகோள் செவ்வாயின் மேற்பரப்பில் மூன்றில் ஒரு பகுதி தண்ணீரால் மூடப்பட்டிருந்ததாக கூறுகிறது, வெள்ளி கிரகத்தில் ஏற்பட்ட பசுமைக்குட்டில் விளைவால் அங்கிருந்த கடல் ஆவியாகி சென்றிருக்கலாம் என்கின்றனர்.
பல குள்ள கிரகங்கள் மற்றும் துணைக்கோல்களின் மேற்பரப்பில் உறுதிபடுத்தப்படாத சமுத்திரங்கள் இருக்கலாம் என ஊகிக்கப்படுகின்றன; குறிப்பிடத்தக்க வகையில், வியாழன் கோளின் துணைக்கோளான ஐரோப்பாவின் கடல் பூமியின் நீரின் அளவைவிட இரு மடங்கு அதிகமாகக் கொண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
சூரியக் குடும்பத்தில் உள்ள பெரிய கிரகங்களில் திரவ வளிமண்டல அடுக்குகள் இன்றும் இருக்கலாம் என உறுதிப்படுத்த கூறுகளைக் கொண்டிருக்கின்றன. பெருங்கடல் கிரகங்கள் என்பது ஒரு கருதுகோள் வகையாகும், இந்த கிரகங்களின் மேற்பரப்பு முழுவதும் திரவத்தால் மூடப்பட்டிருக்கும்.
பெருங்கடலின் ஆழத்தை அளவிட ஃபாத்தோ மீட்டர் என்ற கருவி பயன்படுகிறது.
ஒரு லிட்டல் கடல் நீரில் உள்ள சராசரி உப்பின் அளவு – 3.5% ஆகும்.
சூரிய ஒளி கடலில் 200 மீட்டர் ஆழம் வரை ஊடுருவ இயலும்.
ஆசியாவையும் ஐரோப்பாவையும் பிரிக்கும் கடல் காஸ்பியன் கடல் ஆகும்.
கடல் எல்லைகள்
பெரும்பாலான நாடுகளின் கடல் எல்லை என்பது அவற்றின் கடற்கரையில் இருந்து 12 கடல் மைல்கள் (Nautical Miles) என கணக்கிடப்படுகிறது.
