பேரீச்சை மரம்



பேரீச்சை Phoenix dactylifera பனை வகையைச் சேர்ந்த ஒரு மரம். இம்மரம் இதனுடைய இனிப்பான பழங்களுக்காக வளர்க்கப்படுகிறது.

இம்மரம் முதன்முதலில் எங்கு வளர்க்கப்பட்டது என்பதற்கான விவரம் தெரியவில்லை எனினும் பெர்சியக் குடாவில் தொடங்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இது ஒரு நடுத்தர அளவுள்ள தாவரம். 15 முதல் 25 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இதன் ஓலைகள் 4 முதல் 6 மீட்டர் நீளம் வரை இருக்கும்.

ஓர் ஓலையில் 150 ஈர்க்குகள் வரை இருக்கும். ஒவ்வோர் ஈர்க்கும் 30 செ. மீ நீளம் வரை வளரும். மரத்தின் உச்சி 6 முதல் 10 மீட்டர் வரை இருக்கும்.

ஒவ்வொரு பழமும் அதன் அளவையும் வகையையும் பொறுத்து 20-70 கலோரி சத்தினைக் கொண்டிருக்கும். இம்மரம் தோற்றத்தில் தமிழகத்தில் இயல்பாக காணப்படும் ஈச்சை மரத்தை ஒத்தது.

உலக வரலாற்றில் பழமையான மரமாக கருதப்படுவது பேரீச்சை மரமாகும்.