1940, ஜூன், 30 – முதன் முதலில் இந்தியாவில் போனஸ் வழங்கப்பட்டது.

1948, செப்டம்பர், 24, தேதி ஹோண்டா நிறுவனம் தொடங்கப்பட்டது.

2022, ஏப்ரல், 26 – டிவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு எலான் மஸ்கிடம் விற்க ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான டிவிட்டர் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் வாங்குவதற்கு உலக பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் முன் வந்தார். ஒரு பங்கை சந்தை விலையை விட 15 சதவீதம் அதிகமாக விலை கொடுத்து 54.20 டாலருக்கு வாங்கத் தயார் என்றும் அறிவித்தார். இது குறித்து ஆலோசிக்கப்பட்ட நிலையில், எலான் மஸ்கின் அழைப்பை டிவிட்டர் நிர்வாகம் ஏற்றுக் கொண்டதாக அறிவித்துள்ளது. டிவிட்டரை சுதந்திரமாகப் பயன்படுத்தும் சமூக ஊடகமாக மாற்றுவேன் என்று தெரிவித்துள்ள எலன் மஸ்க், சுதந்திரமான பேச்சுரிமைதான் ஜனநாயகத்தின் அடிப்படை என்று குறிப்பிட்டுள்ளார். மனித குலத்தின் எதிர்காலம் இதில் விவாதிக்கப்படுவதாகவும் எலன்மஸ்க் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். பங்குச்சந்தையிலிருந்து நீக்கப்பட்டு தனிநபர் நிறுவனமாக மாறுகிறது.

2022, ஏப்ரல், 30 – பிரபல மொபைல் நிறுவனமான ‘ஸியோமி இந்தியா’ நிறுவனத்தின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.5,551.27 கோடி பணமானது, அந்நிய செலவாணி மேலாண்மைச் சட்டம் 1999 இன் விதிகளின் கீழ் இந்திய அமலாக்கத் துறையால் பறிமுதல் செய்யப்பட்டது.

2022, ஜூன், 22 – ப்ளின்கிட் என்ற மளிகை பொருட்கள் டெலிவரி செய்யும் நிறுவனத்தை ரூ.4,477 கோடிக்கு வாங்கியது உணவுப் விநியோகம் செய்யும் நிறுவனமாக சொமாட்டோ.

2022, அக்டோபர், 19 – வணிக நடத்தை விதிகளை மீறியதற்காக மேக் மை டிரிப் (Make My Trip), கோஐபிபோ (Goibbo) மற்றும் ஓயோ (OYO) ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு மொத்தம் 392 கோடி ரூபாய் அபராதம் விதித்தது இந்திய போட்டி ஆணையம்.

2022, அக்டோபர், 24 – பிலிப்ஸ் நிறுவனத்தில் செயல்திறன் மற்றும் விற்பனையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் 4,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளது.

2022, அக்டோபர், 26 – Dry Dove ஷாம்புவில் அதிகளவு உள்ள பென்சீன் என்ற ரசாயனம், ரத்தப் புற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் டவ் ஷாம்பை திரும்ப பெற யுனிலிவர் நிறுவனம் முடிவு. அக்டோபருக்கு முன்பு தயாரித்த ஷாம்புகள் மட்டும் திரும்ப பெற முடிவு.


நிறுவனம்தலைமையகம்
Nokiaபின்லாந்து
Xiaomiசீனா
Samsung தென் கொரியா
One Plusசீனா
Sonyஜப்பான்
Realmeசீனா
Oppoசீனா