மடகாஸ்கர் என்பது ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென்கிழக்கே இந்தியப் பெருங்கடலிலுள்ள ஒரு தீவு நாடு ஆகும்.

இந்நாட்டின் உத்தியோகபூர்வ பெயர் மடகாஸ்கர் குடியரசு (Republic of Madagascar).

தலைநகரம் – அண்டனாரீவோ

ஆட்சி மொழி – மலகாசி, பிரெஞ்சு, ஆங்கிலம்

மக்கள் – மலகாசி

அரசாங்கம் – குடியரசு

நாணயம் – மடகாசி அரியாரி

தொலைபேசி அழைப்புக்குறி +261

வலைதளக்குறி .mg

இத்தீவு உலகிலேயே நான்காவது மிகப்பெரிய தீவு ஆகும்.

மடகாஸ்கர் உயிரியற் பல்வகைமை கூடிய நாடாகும்.

உலகிலுள்ள தாவர மற்றும் விலங்கு வகைகளில் ஐந்து சதவீதமானவை இத்தீவிவில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இத்தீவில் உள்ள விலங்குகளும் மரஞ்செடி கொடிகளும் மிகவும் தனித்தன்மை வாய்ந்தவை. அவற்றுள் சுமார் 80% உலகில் வேறு எங்கும் காண இயலாதன.

சிறப்பபித்துச் சொல்வதென்றால் பாவோபாப் மரங்களும், மனிதர்கள்,கொரில்லா, சிம்ப்பன்சி, ஒராங்குட்டான் முதலியன சேர்ந்த முதனி எனப்படும் தலையாய உயிரினத்தைச் சேர்ந்த இலெமூர் என்னும் இனம் சிறப்பாக இங்கே காணப்படுகிறது.

இங்கே பேசப்படும் மொழி மலகாசி (mal-gazh) என்பதாகும்.

இது மலாய், இந்தோனேசிய மொழிகள் அடங்கிய ஆஸ்ட்ரோனேசிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.

1897, பிப்ரவரி, 10 – மடகாஸ்கரில் மதச்சுதந்திரம் அறிவிக்கப்பட்டது.

1960, ஜூன், 26 – பிரான்சிடமிருந்து மடகாஸ்கர் விடுதலை அடைந்தது.



ஆசியா


ஐரோப்பா


ஆப்ரிக்கா


வட அமெரிக்கா


தென் அமெரிக்கா


ஆஸ்திரேலியா


அண்டார்டிகா