1956, நவம்பர், 01 – அன்று மத்தியப் பிரதேசம் மாநிலம் உருவாக்கப்பட்டது.

மத்தியப் பிரதேசம் என்பது மத்திய இந்தியாவில் உள்ள ஒரு மாநிலமாகும். இதன் தலைநகர் போபால்.

இந்தூர், உஜ்ஜயினி, குவாலியர் ஆகியவை மற்ற முக்கிய நகரங்கள். இந்தி மொழி இங்கு பெரும்பான்மையாக பேசப்படும் மொழி ஆகும்.

மத்தியப் பிரதேசத்தில் சம்பல் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது.

இந்தியாவில் அதிக அளவில் வைரங்களை உற்பத்தி செய்யும் மாநிலம் மத்தியப் பிரதேசம் ஆகும்.

இந்தியாவில் இரட்டை பிளாட்பாரத்துடன் கட்டப்பட்ட முதல் ரயில் நிலையம் மத்தியப் பிரதேசத்திலுள்ள கான்பூர் இரயில் நிலையம் ஆகும்.

இந்தியாவின் முதல் உணவுப் பூங்கா மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ளது.

இந்தியாவில் அதிக அளவு வனப்பகுதிகளைக் கெண்ட மாநிலமாகும்.

இந்தியாவில் அதக அளவிலான புலிகள் இம்மாநிலத்தில் உள்ளது.

இந்தியாவில் மிக அதிக அளவிலான பழங்குடியினர் இம்மாநிலத்தில் உள்ளனர்.

இம்மாநிலத்தின் சுற்றுலாத் தலைநகரம் குவாலியர் ஆகும்.

இந்திய ரூபாய் நோட்டிற்கான காகிதங்கள் மத்தியப் பிரதேசத்திலுள்ள ஹோஷங்காபாத் (Hoshangabad) என்னும் இடத்தில் தயாரிக்கப்படுகின்றன.

தேசிய செய்திகள் மற்றும் காகித ஆலைகள் பர்காபூரிலுள்ள நேபாநகர் பகுதியில் அமைந்துள்ளது.

1973, ஜனவரி, 11 – அன்று, இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் மத்திய பிரதேசத்திலுள்ள இந்தூரில் பிறந்தார்.

2022, ஜனவரி, 02 – மத்தியப் பிரதேசத்தில் பேருந்து விபத்தில் 22 பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த ஓட்டுநருக்கு 190 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு பன்னா என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து வறண்ட ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் கொல்லப்பட்டனர். இதுகுறித்த விசாரணையில் பயணிகள் பேருந்தை மெதுவாக இயக்கக் கூறியும் ஓட்டுநர் ஷம்சுதீன் வேகமாக இயக்கியது தெரியவந்தது. இந்தியாவில் விபத்தில் சிக்கிய ஓட்டுநருக்கு இவ்வளவு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைப்பது இதுவே முதல் முறை.

இந்திய அரசு


மாநிலங்கள்


யூனியன் பிரதேசங்கள்


முக்கிய நகரங்கள்


இந்திய ஆறுகள்