வடகிழக்கு மாநிலமான மிசோரம் பற்றிய சில முக்கிய தகவல்கள்


1987, பிப்ரவரி, 20 – அன்று, மிசோரம் மாநிலம், இந்தியாவின் 23-ஆவது மாநிலமாக உருவாக்கப்பட்டது.

2022, ஜூலை, 12 – இந்தியாவிலேயே மிசோரமில் 71% பெண்கள் மக்கள் பிரதிநிதிகர், நிறுவனங்களின் மேலாளர்கள் என உயர் பதவிகளில் இருப்பதாக தொழிலாளர் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மிசோரம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்று.

அய்சால் இம்மாநிலத்தின் தலைநகர்.

மீசோ பழங்குடி இன மக்கள் இங்கு பெரும்பான்மையாக வசிக்கின்றனர்.

மீசோ மொழி அதிகாரப்பூர்வ மொழி.

இம்மாநிலத்தின் பெரும்பான்மையான மக்கள் கிறித்தவர்கள்.

மிசோரம் மாநில மக்களின் கல்வியறிவு விகிதம் 91.33%.

கேரளத்துக்கு அடுத்தபடியாக அதிக கல்வியறிவு உள்ள மாநிலம் இது.

இந்த மாநிலத்தை திரிபுரா, அசாம், மணிப்பூர் ஆகிய மாநிலங்கள் சூழ்ந்துள்ளன.

இந்த மாநிலம் வங்காளதேசம், மியான்மர் ஆகிய நாடுகளுடன் சுமார் 722 கி.மீ நீளத்துக்கு எல்லையை கொண்டுள்ளது.

நாட்டின் 2 வது குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலமாகும்.

மிசோரம் சுமார் 21,081 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.

மாநிலத்தில் சுமார் 91% காடுகள் உள்ளன.

மூங்கில் உற்பத்தி செய்யும் முக்கியமான மாநிலமாகும்.

மிசோரமானது, கிழக்கின் பாடல் பறவை என்று அழைக்கப்படுகிறது.

இம்மாநிலம் மலை மக்களின் நிலம் என்று அழைக்கப்படுகிறது.