மகேந்திரவர்மன் (கி.பி. 600 முதல் கி.பி. 630 வரை) தமிழ்நாட்டின் வடபகுதிகளை ஆண்ட பல்லவ அரசனாவான்.

இவனே வரலாற்றாளர்களால் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் எனக் குறிப்பிடப்படுகிறான்.

இவன் களப்பிரரை ஒடுக்கி மீண்டும் பல்லவ அரசை நிறுவிய சிம்மவிட்டுணுவின் மகனாவான்.

இவனது ஆட்சிக்காலத்தில்தான் சாளுக்கிய பேரரசன் இரண்டாம் புலிகேசி காஞ்சியின் மீது படையெடுத்தான்.

புலிகேசியால் காஞ்சி முற்றுகையிடப்பட்டு பல்லவ சைன்யம் தோற்கடிக்கப்பட்டது.

இவன் கி.பி 630 வரை ஆட்சியிலிருந்தான் என்பதில் கருத்தொற்றுமை இருந்தபோதிலும் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஆண்டு எது என்பதில் கருத்து வேறுபாடு காணப்படுகின்றது.

ஆய்வாளர்கள் இவ்வாண்டை கி.பி 600, 610, 615 எனப் பலவாறாகக் குறிப்பிடுகின்றனர்.

பட்டப்பெயர்கள்

  • மத்தவிலாசன்
  • சித்திரகார புலி
  • சங்கீரண கதி
  • சத்ருமல்லன்
  • அவனிபாஜன்
  • பரிவாதனி என்ற வீணை வாசிப்பில் சிறந்தவன்.

மகேந்திரவர்மன் இலக்கியம் மற்றும் கட்டிடக்கலைகளைப் போற்றியதோடு அவை வளரவும் வழி செய்தான். புகழ் பெற்ற குடைவரைக் கோயில் கலையின் முன்னோடி இவ்வரசனே.

மகேந்திரவர்மன் தான் கட்டிய மண்டகப்பட்டு குடைவறைக் கோவிலின் கல்வெட்டில் மரம், செங்கல் மற்றும் சுண்ணாம்புக் கலவையின்றி இக்கோவிலைக் கட்டியதாக அறிவித்துள்ளான். மகேந்திரவர்மனின் சிறந்த குடைவறைக் கோவில்களில் சிலவற்றை மகாபலிபுரத்தில் காணலாம்.

மத்தவிலாச பிரஹசனம் என்னும் சமஸ்கிருத நாடகத்தையும் இவன் இயற்றியுள்ளான். இது சைவ மற்றும் பௌத்த துறவிகளை மையமாய்க் கொண்ட ஒரு நகைச்சுவை நாடகமாகும்.

மகேந்திரவர்மன் இடையில் சமண மதத்தைத் தழுவியிருந்தான், பின்னர் சைவ நாயன்மார்களில் ஒருவரான அப்பரால் தன்நோய்த் தீர்க்கப்பெற்று மீண்டும் சைவ சமயத்திற்கு மாறினான்னென்று அறிகின்றோம்.

மகேந்திரவர்மனையடுத்து பல்லவ அரசர்களில் மிகப்புகழ்பெற்றவனும் மகேந்திரவர்மனின் மகனுமான நரசிம்மவர்மன் அரியணையேறினான்.

மகாபலிபுரத்தில் உள்ள குடைவறைக் கோவில்கள். மகேந்திரவர்மனின் ஆட்சிக்காலத்தில்தான் இவற்றின் கட்டுமானம் தொடங்கியதாக அறியப்படுகின்றது.

முதலாம் மகேந்திரவர்மன் மூலம் முதன்முதலில் உருவாக்கப்பட்ட மண்டகப்பட்டு குடைவரைக் கோவில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது.




சிந்து சமவெளி நாகரிகம் (கி.மு. 3000 – கி.மு. 2500)

மகாவீரர் (கி.மு. 599 – கி.மு. 527)

கௌதம புத்தர் (கி.மு. 563 – கி.மு. 483)




கி.பி. 1201 முதல் கி.பி 1500 ஆண்டு வரை


கி.பி. 1501 முதல் கி.பி 1700 ஆண்டு வரை


கி.பி. 1701 முதல் கி.பி 1800 ஆண்டு வரை



கி.பி. 1801 முதல் கி.பி 1850 ஆண்டு வரை


கி.பி. 1851 முதல் கி.பி 1900 ஆண்டு வரை


கி.பி. 1901 முதல் கி.பி 1951 ஆண்டு வரை


கி.பி. 1951 முதல்



புதிய கற்காலம்


சங்ககால தமிழ் புலவர்கள்

கம்பர் (கி.பி. 12 ஆம் நூற்றாண்டு)