ஆண்டுசிறப்பு
1770முதல் இந்திய வங்கியான ஹிந்துஸ்தான் வங்கி தொடங்கப்பட்டது.
1825, செப்டம்பர், 27இங்கிலாந்தில் முதல் பயணிகள் தொடருந்து சேவை தொடங்கப்பட்டது.
1854இந்தியாவின் முதல் சணல் ஆலை, ஆங்கிலேயரான ஜார்ஜ் ஆக்லாண்டு என்பவரால் கொல்கத்தாவிற்கு அருகில் உள்ள ரிஷ்ரா என்னுமிடத்தில் தொடங்கப்பட்டது.
1867, பிப்ரவரி, 17சூயஸ் கால்வாய் வழியாக முதலாவது கப்பல் சென்ற தினம்.
1867முதன் முதலல் இந்தியாவில் ராயல் பெங்கால் காகித தொழிற்சாலை கொல்கத்தாவிற்கு அருகில் உள்ள பாலிஞ்ச் என்னும் இடத்தில் நிறுவப்பட்டது.
1875, மே, 20முதன் முதலாக 17 நாடுகள் ஒன்று சேர்ந்து உலகில் உள்ள அனைத்து நாடுகளும் ஒரே அளவினை பயன்படுத்த சர்வதேச அளவியலை உருவாக்கினர்.
1890, பிப்ரவரி, 13முதன் முதலில் பொட்டானிக்கல் சர்வே உருவாக்கப்பட்டு பின்னர் இந்திய தாவரவியல் கள ஆய்வு மையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
1896இரவீந்திரநாத் தாகூர் அவர்களால் வந்தே மாதரம் பாடல் முதன் முதலாக பாடப்பட்டது.
1908, ஜனவரி, 12முதன் முதலாக தூர இடத்துக்கான வானொலி செய்தி ஈபிள் டவரிலிருந்து அனுப்பப்பட்டது.
1903, 1911இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற முதல் நபர் மேரி க்யூரி ஆவார்.
1912இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்
1914, ஆகஸ்ட், 05உலகின் முதல் சிவப்பு மற்றும் பச்சை வண்ண போக்குவரத்து விளக்கு (Traffic Light) அமெரிக்காவிலுள்ள Cleveland என்னுமிடத்தில் நிறுவப்பட்டது.
1914இந்தியாவின் முதல் கடல் பாலமான பாம்பன் பாலம் இராமநாதபுரத்திலுள்ள பாம்பனில் திறக்கப்பட்டது.
1941, செப்டம்பர், 23டிஸ்னியின் அனிமேஷன் படமான டம்போ (Dumbo) – வினை முதன் முதலில் காட்சிப்படுத்தியது.
1947முதல் இந்திய பிரதமராக ஜவஹர்லால் நேரு அவர்கள் பதவியேற்றார்
1971, ஜனவரி, 05ஆஸ்திரேலியாவில் உலகின் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணியும் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டு தோல்வியைத் தழுவியது.
1960இலங்கையில், உலகின் முதல் பெண் பிரதமராக பதவியேற்றார்
1964சீனா முதன் முதலாக, அணு ஆயுத சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்திக்காட்டியது.
1976, ஏப்ரல், 11ஆப்பிள் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான Apple – 1 கணிணி வெளியிடப்பட்டது.
1984, மே, 238847.7 மீட்டர் உயரம் உள்ள எவரெஸ்ட் கொடுமுடியில் இந்திய தேசிய கோடியை பச்சேந்திரி பால் பறக்கவிட்டார். உலகின் மிக உயரமான மலைச்சிகரமான இமயமலையில் உள்ள எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்த முதல் இந்திய பெண் ஆவார்.
1984இந்திய விண்வெளி வீரரான ராகேஷ் சர்மா விண்வெளிக்கு சென்றார். மேலும் இவர் விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியர் ஆவார்.
2005, ஏப்ரல், 23YouTube -இல் முதல் வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டது.

1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 மற்றும் 9 ஆம் நாள் ஜப்பானின், ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஆகிய நகரங்கள் மீது இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்கா அணுகுண்டு வீசி அழித்தது. உலகில் மனிதர்களை அழிக்க ஓரு நாடு இன்னெரு நாட்டின் மீது வீசிய முதல் ஹைட்ரஜன் அணுகுண்டு இதுவெ ஆகும்.

1981 ஆம் ஆண்டு, ஏப்ரல், 27 ஆம் தேதி, XEROX PARC முதன் முதலாக கணிணி Mouse ஐ அறிமுகப்படுத்தியது.

1989 ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட முதல் பெண் நீதிபதியாக எம்.பாத்திமா பீவி நியமிக்கப்பட்டார். உயர்ந்த நீதித்துறை பதவிகளை ஏற்ற முதல் முஸ்லீம் பெண் ஆவார். ஆசியாவிலேயே மிக உயர்ந்த நீதிமன்றத்தின் நீதிபதியாக முதல் பெண்மணி ஆவார்.

1996 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி குளோனிங் முறையில் முதலாவது பாலூட்டியான டோலி என்ற செம்மறி ஆடு உருவாக்கப்பட்டது.

1996, அக்டோபர், 25 – அன்று, தமிழ்நாட்டின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயராக மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றார்.

சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள டாக்ஸிங் சர்வதேச விமான நிலையம் (பி.கே.எக்ஸ்) உலகிலேயே மிகப்பெரிய மற்றும் சூப்பர்சைஸ் செய்யப்பட்ட விமானநிலையம் ஆகும்.

உலகிலேயே மிக நீளமான கடற்கரை அமெரிக்காவிலுள்ள புளோரிடா மாநிலத்தில் தெற்கில் காணப்படும் மியாமி கடற்கரை ஆகும்.

உலகிலேயே மிக நீளமான எல்லையைக் கொண்ட இரு நாடுகள் கனடா மற்றும் அமெரிக்கா ஆகும்.

தமிழின் முதல் உரைநடை நூல் பரமார்த்த குரு கதை ஆகும்.


இந்தியா

இந்தியாவின் மிக உயரமான சிகரம் காட்வின் ஆஸ்டின் ஆகும்.

இந்தியாவின் மிகப் பெரிய ரயில் நிலையம் – ஹவுரா ரயில் நிலையம்

இந்தியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையம் – சென்னை மொஃபுசில் பஸ் டெர்மினல்

இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் – இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம்

இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகம் – மும்பை துறைமுகம்

இந்தியாவின் மிகப்பெரிய உயர் நீதிமன்றம் – அலகாபாத் உயர்நீதி மன்றம்.

இந்தியாவின் மிகச்சிறிய உயர்நீதிமன்றம் மேகாலயா உயர்நீதிமன்றம் ஆகும்.

இந்தியாவின் முதல் ரயில் நிலையம் – போரி பண்டர் ரயில் நிலையம்

இந்தியாவின் முதல் விமான நிலையம் – ஜூஹூ விமான நிலையம்

இந்தியாவின் முதல் உயர் நீதிமன்றம்கொல்கத்தா நீதிமன்றம்

இந்தியாவில் அதிக அளவில் வைரங்களை உற்பத்தி செய்யும் மாநிலம் – மத்தியப் பிரதேசம்

இந்தியாவின் அதிக அளவு இரும்பு உற்பத்தி செய்யும் மாநிலம் ஒடிசா ஆகும்.

இந்தியாவில் அதிக அளவில் மைக்காவை உற்பத்தி செய்யும் மாநிலம் ஆந்திரப் பிரதேசம் ஆகும்.

இந்தியாவில் அதிக அளவில் தேயிலை உற்பத்தி செய்யும் மாநிலம் அஸ்ஸாம் ஆகும்.

இந்தியாவில் அதிக அளவில் காபி உற்பத்தி செய்யும் மாநிலம் கர்நாடகா ஆகும்.

இந்தியாவில் முதல் தேசிய விருது வென்ற பாடகி பி.சுசிலா ஆவார்.

இந்தியாவின் முதல் கிரிக்கெட் வீரர் கே.எஸ்.ரஞ்சித் சிங்

வண்டலூர் உயிரியல் பூங்கா, செங்கல்பட்டு மாவட்டம், தமிழ்நாடு, இந்தியாவில் முதல் பொது மற்றும் மிகப் பெரிய பூங்காவாகும்.


சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் – சர்.ராஜா முத்தையா செட்டியார்.

இரவீந்திரநாத் தாகூர் அவர்கள் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் ஆவார். கீதாஞ்சலி எனும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் ஆவார். இந்த கவிதைத் தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார். மேலும் ஐரோப்பியர் அல்லாத ஒருவர் இந்த விருதைப் பெறுவதும் இதுவே முதல் முறையாகும்.

வெனிசுலாவில் உள்ள ஏஞ்சல் (Angel Falls) நீர்வீழ்ச்சி உலகின் மிக உயரமான நீர்வீழ்ச்சி ஆகும். இதன் உயரம் 979 மீட்டர் ஆகும்.

இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை இராணி வேலுநாச்சியார் ஆவார்.

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் – கர்னம் மல்லேஸ்வரி ஆவார்.

முதன் முதலாக நோபல் பரிசு பெற்ற பெண் அன்னை தெரேசா ஆவார்

சிறிமாவோ பண்டாரநாயக்கா உலகிலேயே முதலாவது பெண் பிரதமர் ஆவார்.

பச்சேந்திரி பால், உலகின் மிக உயரமான மலைச்சிகரமான இமயமலையில் உள்ள எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்த முதல் இந்திய பெண் ஆவார்.

இந்திரா காந்தி அவர்கள் இந்தியாவின் முதல் பெண் பிரதமர் ஆவார்.

சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் சரோஜினி நாயுடு ஆவார். இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது பெண் தலைவரும், உத்திரப் பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுநரும் ஆவார்.

இந்தியாவின் முதல் பெண் ஜ.பி.எஸ் அதிகாரி கிரண் பேடி ஆவார்.

விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியப் பெண் கல்பனா சாவ்லா ஆவார்.

இந்தியாவின் முதல் பெண் பைலட் துர்கா பானர்ஜி ஆவார். இந்தியாவின் முதல் வனிக விமான பைலட்டும் இவரே ஆவார்.

பிரதிபா பாட்டில் அவர்கள் இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவராவார்.

வெளிநாட்டு தூதுவராக சென்ற முதல் இந்தியப் பெண் – டாக்டர் விஜயலெட்சுமி பண்டிட். ஐக்கிய நாடுகள் அபையின் முதல் பெண் தலைவர்.

இந்தியாவில் அசோக் சக்ரா விருது பெற்ற முதல் பெண் நீரஜா பனோட் ஆவார்.

சென்னை மாகாணத்தில் முதன் முதலில் மதுவிலக்கை அமல்படுத்தியவர் – ராஜாஜி

சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் மெளண்ட்பேட்டன் பிரபு ஆவார்.

ஷாஜகானின் ஆட்சியை மொகளாயர்களின் பொற்காலம் என்று அழைக்கப்படுகியது.

சர்தார் வல்லபாய் பட்டேல் – இந்தியாவின் முதல் துணைப் பிரதமர்.

V.நாஹரிராவ் – இந்தியாவின் முதல் தலைமை தணிக்கை மற்றும் கட்டுப்பாட்டாளர்.

சுகுமார்சென் – இந்தியாவின் முதல் தலைமை தேர்தல் ஆணையர்.

G.V.மல்லாங்கர் – இந்தியவின் முதல் சபாநாயகர்

இந்திய தேசியத்தின் பழம்பெரும் பெண்மணி என்று போற்றப்படுபவர் – அன்னிபெசன்ட்.

இந்தியாவில் மொகளாய பேரரசின் கடைசி அரசர் – இரண்டாம் பகதூர் ஷா.

சென்னை மாகான சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் உறுப்பினரும், எட்டு ஆண்டுகள் உதவி சபாநாயகராக பணியாற்றயவர் ருக்மணி லட்சுமிபதி.

நவீன காலத்தில் இந்தியாவுடன் வியாபாரத் தொடர்பு கொண்ட முதல் ஐரோப்பிய நாடு – போர்ச்சுக்கல்

இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த முதல் இந்திய மருத்துவர் – டாக்டர் வேணுகோபால்.

முதன் முதலாக கணிப்பொறிக்கு புரோகிராம் எழுதியவர் – லேடி லவ்லேஸ்

உலகில் மிகப்பெரிய விலங்கு எது? திமிங்கிலம்

உலகில் உயரமான விலங்கு எது? ஒட்டகச்சிவிங்கி

உலகில் மிக உயரமான மலை எது? இமயமலை

உலகிலேயே மிக நீளமான நதி எது? அமேசன்(6.750 கி.மீ)

உலகிலேயே மிக நீளமான நதியாகக் கருதப்பட்ட நதி யாது? நைல் நதி(6.690 கிலோ மீட்டர்)

உலகியே மிக ஆழமான ஆழி எது? மரியானாஆழி(11.522மீற்றர்)

உலகிலேயே மிகப்பெரிய நகரம் எது? லண்டன்
உலகிலேயே பெரிய பாலைவனம் யாது? சஹாராப்பாலைவனம்

உலகிலேயே மிகச் சிறிய அரசு எது? வத்திக்கான்

உலகிலேயே பெரிய சமுத்திரம் எது? பசுபிக் சமுத்திரம்

உலகிலேயே பெரிய தீவு எது? கிறீன்லாந்து

உலகிலேயே பெரிய கண்டம் எது? ஆசியாக்கண்டம்

உலகிலேயே சிறிய கண்டம் எது? அஸ்திரேலியா

உலகிலேயே பெரிய நாடு எது? கனடா(ரஷ்யா சிதறிய பிறகு)

உலகிலேயே அதிகளவில் எரிமலைகள் உள்ள நாடு எது? இந்தோனேஷியா

உலகிலேயே அதிக மழை பெறும் இடம் யாது? சீராப்புஞ்சி

உலகிலேயே பெரிய நன்னீர் ஏரி யாது? சுப்பீரியர் ஏரி

சூரியனை புமி ஒருமுறை சுற்றிவர எடுக்கும் காலம் யாது? 365 நாடகள்.6 மணி 9நிமிடம். 9.54 செக்கன்

உலகிலேயே மிகவுயர்ந்த சிகரம் யாது? எவரெஸ்ட்

உலகிலேயே பெரிய எரிமலை யாது? லஸ்கார்(சிலி) 5.990 மீற்றர்

உலகிலேயே மிக நீளமான மலை எது? அந்தீஸ்மலை

உலகிலேயே மிகவும் பரந்த கடல் எது? தென்சீனக்கடல்

உலகிலேயே பெரிய ஏரி எது? கஸ்பியன் (ரஷ்யா-ஈரான்)

உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது? ஏஞ்சல்ஸ்(வெனிசுவெலா) 979மீற்றர்

உலகிலேயே அதிக மக்கள் தொகையுள்ள நாடு எது? சீனா

உலகிலேயே குறைந்த மக்கள் தொகையுள்ள நாடு எது? வத்திக்கான்

உலகிலேயே மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் எங்குள்ளது? காரக்புர்

உலகிலேயே மிக ஆழமான ஏரி எது? பைக்கால் ஏரி

உலகிலேயே மிக நீளமான குகை எது? மாமத் குகை

உலகில் உள்ள ஒரே ஒரு இந்து மத நாடு எது? நேபாளம்

உலகிலேயே மிகப்பெரிய பு எது? ரவல்சியாஆர்ணல்டி

உலகிலேயே மிக நீளமான வீதி அமைந்துள்ள இடம் எது? அலாஸ்கா

உலகிலேயே மிகப் பழைமையான தேசப்படத்தை வரைந்தவர் யார்? தொலமி

உலகிலேயே மிகப் பிரபலமான விஞ்ஞான சஞ்சிகை எது? நேச்சர்

ஆசியாவில் உள்ள கிறிஸ்தவ நாடு எது? பிலிப்பைன்ஸ்

உலகில் எரிமலை இல்லாத கண்டம் எது? அவுஸ்ரேலியா

உலகில் மிக உயரத்திலுள்ள ஏரி எது? டிடிக்காகா

உலகில் மிக உயரமான அணை எது? போல்டர் அணை

உலகிலேயே மிகப் பழைமையான கம்யுனிஸ நாடு எது? சீனா

உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு எது? இந்தியா

உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழி எது? மாண்டரின்(சீனா)

உலகில் அதிகளவில் அச்சிடப்படும் நூல் எது? பைபிள்

கடல்மட்டத்திற்கு கீழே உள்ள நாடு எது? நெதர்லாந்து

உலகில் ஆறுகளே இல்லாத நாடு எது? சவுதி அரேபியா

உலகில் மிகப் பெரிய இஸ்லாமிய நாடு எது? இந்தோனோசியா

உலகில் மிக உயரமான அணை யாது? போல்டர் அணை ( manas hussain )