முயல்



முயல்கள் மற்றும் குழிமுயல்கள் லெபோரிடே என்ற குடும்பத்தின் கீழ் லெபுஸ் (Lepus) என்ற பேரினத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

குழிமுயல்கள் எந்த குடும்பத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளனவோ அதே குடும்பத்தின் கீழ் தான் முயல்களும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

முயல்கள் அளவு மற்றும் வடிவத்தில் குழிமுயல்களை ஒத்துள்ளன.

ஒரே விதமான உணவை உண்கின்றன.

முயல்கள் பொதுவாக தாவர உண்ணிகளாகவும் மற்றும் நீண்ட காதுகளை உடையவையாகவும், வேகமாக ஓடக்கூடியவையாகவும் உள்ளன.

இவை வழக்கமாக தனியாகவோ அல்லது இரண்டு முயல்களாகச் சேர்ந்தோ வாழ்கின்றன.

முயல் இனங்கள் ஆப்பிரிக்கா, ஐரோவாசியா, வட அமெரிக்கா மற்றும் ஜப்பானியத் தீவுக் கூட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவை.

“முயல்” என்ற சொல்லைத் தங்கள் பெயரில் கொண்டுள்ள ஐந்து லெபோரிடேக் குடும்ப உயிரினங்கள் உண்மையான முயல்களாகக் கருதப்படுவதில்லை: ஹிஸ்பிட் முயல் (Caprolagus hispidus) மற்றும் நான்கு இனச் சிவப்புப் பாறை முயல்கள் (புரோனோலகுஸ் (Pronolagus) பேரினம்).

அதேநேரத்தில், கழுதை குழிமுயல்கள் (Jackrabbits) எனப்படுபவை முயல்கள் ஆகும், குழிமுயல்கள் அல்ல.

ஒரு வயதுக்கும் குறைவான முயல் ஆங்கிலத்தில் லெவெரெட் (leveret) என்று அழைக்கப்படுகிறது.

பல முயல்கள் சேர்ந்த ஒரு கூட்டம் ஆங்கிலத்தில் “ட்ரோவ்” (drove) என்று அழைக்கப்படுகிறது.

ஒரு முயல் ஒரு நிமிடத்திற்கு 120 முறை உணவை மெல்லும், மற்றும் 17,000 சுவை மொட்டுக்களை கொண்டுள்ளது.