மூவாலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்

1989, ஜூன் மாதம் துவங்கப்பட்ட இத்திட்டத்தின் நோக்கம் ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி வழங்குவதாகும்.

இத்திட்டத்தின் கீழ் 10 ஆம் வகுப்பு வரை முடித்த பெண்களுக்கு 25,000 ரூபாய் மற்றும் 4 கிராம் தங்க நாணயம் வழங்கப்படும்.

இளங்ளை பட்டம் வரை படித்த பெண்களுக்கு 50,000 ரூபாய் மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படும்.

இத்திட்டத்தின் மூலம் பயன் பெற பெண்ணின் பெற்றோரின் ஆண்டு வருமாணம் 24,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

பெண்ணின் வயது 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு பெண்டிற்கு மட்டுமே வழங்கப்படும்.