1882 – ஆம் ஆண்டு, திட்டகாரில் காகித தொழிற்சாலை நிறுவப்பட்டது.

1892 – ஆம் ஆண்டு, ராணிகஞ்ச் மாவட்டத்தில் காகித தொழிற்சாலை நிறுவப்பட்டது.

1947ஆம் வருடம் அன்றைய வங்காளம், இந்துக்கள் பெரும்பான்மையினராக இருந்த பகுதி மேற்கு வங்காளம் என்றும், இஸ்லாமியரின் பகுதி கிழக்கு வங்காளம் என்றும் பிரிக்கப்பட்டது. இன்றைய வங்கதேசமே அந்த கிழக்கு வங்காளமாகும்.

1950, ஜனவரி, 26 – அன்று இம்மாநிலம் இந்திய அரசால் உருவாக்கப்பட்டது.

2022, பிப்ரவரி, 12 – அன்று முதல் மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் சட்டப்பேரவையை ஒத்திவைத்தார். அரசியலமைப்பின் 174 ஆவது பிரிவின் உட்பிரிவின் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தியதாக ஆளுநர் ட்வீட் செய்தார்.

மேற்கு வங்காளம் (West Bengal) என்பது இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலமாகும்.

இது மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் 4வது பெரிய மாநிலமாகும். இது கிழக்கில் வங்காளதேசத்தையும் மேற்கில் நேபாளம் மற்றும் பூடான் ஆகிய நாடுகளையும் தன் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

இந்தியாவின் 7வது பெரிய நகரமான கொல்கத்தா, இம்மாநிலத்தின் தலைநகராக உள்ளது. வங்காள மொழியே இங்கு பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழி.

மொத்தப் பரப்பளவு – 88,752 சதுர கிலோ மீட்டர்

மாநில விலங்கு – மீன்பிடி பூனை

மாநில பறவை – வெள்ளைக் கழுத்து மீன்கொத்தி

மேற்கு வங்காளம் 294 சட்டமன்ற தொகுதிகளும், 42 மக்களவை தொகுதிகளையும் கொண்டது.

சுந்தரவனக் காடுகள் மற்றும் வங்காளப் புலிகள், இரும்பு மற்றும் நிலக்கரி சுரங்கங்களுக்கு பெயர் பெற்ற மாநிலம்.

இந்தியா நிலக்கரி நிறுவனம் (Coal India Limited), மேற்கு வங்காளம், கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இந்திய அரசுக் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும்.

இந்தியாவின் முதல் காகிதத் தொழிற்சாலை, மேற்குவங்க மாநிலம் சொரம்பூரில் அமைந்துள்ளது.

இந்தியாவில் காகித உற்பத்தி செய்யும் முக்கிய மாநிலமாகும்.

இம்மாநிலத்தின் பெயரை பஸ்ச்சிம் பங்கா என மாற்ற அம்மாநில அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதலுக்குப் பின்னர் மேற்கு வங்காளம் பஸ்ச்சிம் பங்கா என அழைக்கப்படுவது அதிகாரபூர்வமாக நடைமுறைக்கு வரும்.

வங்களா விரிகுடாவின் கிழக்கு கடற்கரையில் கொல்கத்தா துறைமுகம் அமைந்துள்ளது.