மொரிசியஸ் (Mauritius) ஆபிரிக்க கண்டத்திற்கு தென் கிழக்கு கடலோரப் பகுதியில் இருக்கும் ஒரு தீவு நாடு.

இது மடகாஸ்கர் தீவுக்கு 900 கிமீ கிழக்கே அமைந்துள்ளது.

மொரியசு குடியரசு கர்காடசு கராஜொஸ், ரொட்ரிகசு, அகலேகா தீவுகள் ஆகிய தீவுகளையும் கொண்டது.

மொரிசியசு தீவு மசுகரீன் தீவுகளின் ஒரு பகுதியாகும்.

இத்தீவுக்கூட்டத்தில் மொரிசியசுக்குத் தென்மேற்கே 200கி.மீ. தூரத்தில் பிரஞ்சுத் தீவான ரியூனியனும், வடகிழக்கே 570கி.மீ. தூரத்தில் ரொட்ரிகசும் உள்ளன.

நெப்போலியப் போர்களின் போது பிரித்தானியர் இதன் அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டனர்.

1968 – ல் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றது.

இது ஒரு பாராளுமன்றக் குடியரசாகும்.

மேலும் ஆபிரிக்க ஒன்றியம், பொதுநலவாய நாடுகள், தெற்கு ஆபிரிக்க அபிவிருத்திச் சமூகம் போன்றவற்றின் அங்கத்தவராகவும் உள்ளது.

மொரிசியசானது டோடோ பறவைகளின் அறியப்பட்ட ஒரே தாயகமாகும்.

இதன் நிறையினாலும், பறக்கமுடியாத தன்மையினாலும் குடியேற்றக்காரர்களின் இலகுவான உணவாக மாறியது. இதனால் முதலாவது ஐரோப்பியக் குடியேற்றத்திலிருந்து 80 ஆண்டுகளுக்குள் இது இனமழிந்து போனது.

1847 ஆம் ஆண்டு, செப்டம்பர், 20 – நீலப் பென்னின் அஞ்சல் தலையை பிரிட்டானியா, மொரீசியஸில் வெளியிட்டது.


Map of Mauritius Islands - Travel