மௌரியப் பேரரசின் மாமெரும் தலைநகரம் – பாடலிபுத்திரம்

பாடலிபுத்திரத்தில் 570 கண்கானிப்பு கோபுரங்கள் இருந்தன.

பாடலிபுத்திரம் நகரத்திற்கு 64 வாசல்கள் இருந்தது.

மௌரியப் பேரரசின் பட்டு பொதுவாக சீனப் பட்டு என்றே அழைக்கப்பட்டது.

மௌரியர் ஆட்சியில் ஒவ்வோரு கைவினைத் தொழிலுக்கும் பமுகா (அ) பிரமுகர் என்ற தலைவர் இருந்தார்.

மஹாசேத்தி – வணிகக் குழுக்களுக்கிடையிலான பிரட்சனைகளை தீர்த்து வைத்தவராவர்.

வணிக கூட்டத்திற்கு மஹாசர்த்தவாகா என்ற தலைவர் இருந்தார்.

மெகஸ்தனிஸ் ‘தேனை உற்பத்தி செய்யும் மூங்கில்’ என்று கரும்பினை குறிப்பிடுகிறார்.

மேலும், மெகஸ்தனிஸ், ‘கம்பளி வளரும் செடி’ என்று பருத்தியை குறிப்பிடுகிறார்.

அசோகர்

அசோகர் மௌரிய வம்சத்தைச் சேர்ந்த இந்திய அரசர். (பிறப்பு: கிமு 304) மௌரியப் பேரரசில் இவருடைய ஆட்சிக்காலம் கிமு 269 முதல் கிமு 232 வரை ஆகும்.

கலிங்கத்துப் போரை வென்றபின், போரை வெறுத்து புத்த மதத்தை தழுவினார்.

புத்த மதத்தை ஆசியா முழுவதும் பரவச் செய்ய முயற்சிகள் மேற்கொண்டார். ஆயிரக்கணக்கான புத்த விகாரங்கள் கட்டினார்.

இந்தியாவை ஆண்டவர்களில் சிறந்த பேரரசராகக் கருதப்படுகிறார்.

இவர் தந்தை பிந்துசாரரின் ஆட்சியின் போது உஜ்ஜயினியின் ஆளுநராக பணியாற்றினார்.

அசோகர் மேற்கே தற்போதய ஆப்கானிஸ்தானில் உள்ள இந்து குஷ் மலைத் தொடரில் இருந்து கிழக்கே தற்போதய வங்காளம் வரை உள்ள பகுதிகளை ஆட்சி புரிந்தார்.

தற்கால இந்தியாவில் உள்ள தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா பகுதிகளைத் தவிர மற்ற அனைத்து இந்திய ஒன்றியப் பகுதிகளையும் இவர் ஆட்சி செய்துள்ளார்.

இவரின் மாகாண தலைநகரங்களாக தக்சசீலா மற்றும் உஜ்ஜைனி இருந்தன.

அசோகர் கலிங்க நாட்டிற்கு (தற்கால ஒடிசா) எதிராக அழிவுகரமான போரை தொடுத்தார். இப்போரானது அவரது ஆட்சி காலத்தில் எட்டாவது ஆண்டில் நடைபெற்றது.

கி. மு. 260 இல் அதை வென்றார்.

கலிங்கப் போரில் பலர் கொல்லப்பட்டதை கண்ட அசோகர் கி. மு. 263 இன் போது புத்த மதத்தை தழுவினார்.

அப்போரில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இறந்தனர்.

மௌரியர்களின் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்த படையெடுப்பு கலிங்கத்தின் மீதான படையெடுப்பு ஆகும்.

கலிங்க கல்வெட்டுக் கட்டளைகள் 14 முக்கியமான பாறைகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

அசோகர் அவர் எழுப்பிய தூண்கள் மற்றும் கல்வெட்டுகள், இலங்கை மற்றும் நடு ஆசியாவிற்கு புத்த பிக்குகளை அனுப்பிய காரணங்களுக்காக அறியப்படுகிறார்.

மேலும் அசோகர் கௌதம புத்தரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய முக்கியமான இடங்களில் நினைவுச் சின்னங்களை நிறுவினார்.

அசோகரின் கல்வெட்டுகள் தவிர அவரது வாழ்க்கையை பற்றி அறிந்து கொள்ள அவரது இறப்பிற்குப் பிறகு நூற்றாண்டுகள் கழித்து எழுதப்பட்ட புனைவுகளே நமக்கு உதவுகின்றன.

கி. பி. இரண்டாம் நூற்றாண்டு அசோகவதனம் (திவ்வியவதனத்தின் ஒரு பகுதியாகிய “அசோகரின் கதை”) மற்றும் இலங்கை நூலாகிய மகாவம்சம் ஆகிய புனைவுகள் நமக்கு உதவுகின்றன.

அசோகரின் சிங்கத்தூபி நவீன இந்தியாவின் சின்னமாக பயன்படுத்தப்படுகிறது.

“அசோக மரத்துடன்” தனது பெயர் கொண்டிருந்த தொடர்பைப் பற்றிய இவரது நேசமும் அசோகவதனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை அசோகரின், சுமார் 33 கல்வெட்டுக் கட்டளைகள் கிடைத்துள்ன.

அசோகரின் கல்வெட்டுக் கட்டளைகளில் காந்தஹார் பிரகடனங்கள் கிரேக்கத்திலும் அராமிக்கிலும் உள்ளது.

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள அசோகரின் இரண்டு கல்வெட்டுக் கட்டளைகள் கரோஷ்டி எழுத்தில் உள்ளது.

தனது அவுட்லைன் ஆஃப் ஹிஸ்டரி என்ற நூலில் எச். ஜி. வெல்ஸ் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “வரலாற்றின் பத்திகளில் நிரம்பி இருக்கும் பல்லாயிரக்கணக்கான அரசர்களின் பெயர்கள், அவர்களின் கம்பீரங்கள், கருணைகள், அமைதிகள், அரச மேன்மைகள் ஆகியவற்றுக்கு மத்தியில் அசோகரின் பெயரானது பிரகாசிக்கிறது, பிரகாசிக்கிறது, பிரகாசித்துக் கொண்டே இருக்கிறது, கிட்டத்தட்ட தனியாக ஒரு நட்சத்திரத்தைப் போல.

அசோகர் மக்களுக்கு தம்மத்தை போதிக்குமாறு தனது அதிகாரிகளை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள அறிவுறுத்தினார்.