1873 ஆம் ஆண்டு, இந்திய யானைகள் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது.
1927 ஆம் ஆண்டு, இந்திய காடுகள் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது.
2010 ஆன் ஆண்டு, இந்திய நாட்டின் பாரம்பரிய விலங்காக யானை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
யானை பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி (இலையுண்ணி) விலங்காகும்.
இது நிலத்தில் வாழும் விலங்குகள் யாவற்றினும் மிகப் பெரியதாகும்.
மிக நீண்ட நாட்கள் வாழக்கூடியதும் ஆகும் (~ 70 ஆண்டுகள்).
மனிதர்கள் தவிர்ந்த மற்றைய விலங்குகளில் இதுவே அதிக நாட்கள் வாழும் தரைவாழ் விலங்கு ஆகும்.
யானைகள் மிகவும் வலிமையானவை.
வேட்டை விலங்குகளும் காட்டுயிர்களின் உணவுப் படிநிலையில் உயர்நிலையிலுள்ளவைகளுமான சிங்கம் (அரிமா), புலி முதலியனவும் நெருங்க முடியாத வலிமை கொண்டவை.
சிங்கங்கள் ஒன்றாகச் சேர்ந்து, தனியாக வர நேரிடும் களைத்த அல்லது இளைத்த யானையைக் கொல்லும்.
ஆனால், இவ்வகை நிகழ்வுகள் மிகமிகக் குறைவே.
யானைகள் குடும்பமாக வாழும். மேலும், இவை அதிக ஞாபக சக்தி கொண்டவை.
யானைகளில் மூன்று சிற்றினங்கள் இன்று உலகில் எஞ்சியுள்ளன.
அவை,
- ஆப்பிரிக்கப் புதர்வெளி யானைகள்
- ஆப்பிரிக்கக் காட்டு யானைகள்
- ஆசிய யானைகள்
இவைகளுக்கிடையே சிறப்பான வேறுபாடுகள் உள்ளன.
பொதுவாக, எல்லா யானைகளும் ஏறத்தாழ 70 ஆண்டுகள்வரை உயிர்வாழ்கின்றன.
ஆண் யானைக்குக் களிறு என்று பெயர்.
பெண் யானைக்குப் பிடி என்று பெயர்.
யானையின் குட்டியைக் கன்று என்றோ, குட்டியானை என்றோ சொல்வர்.
யானை உரக்க எழுப்பும் ஒலியைப் பிளிறுதல் என்பர்.
ஒரு யானை தனு வாழ்நாளில் 18 லட்சத்து 25 ஆயிரம் மரங்கள் வளர காரணமாகின்றது.
யானையைப் பற்றிய சில ஆச்சர்யமூட்டும் தகவல்கள்
- யானை ஒரு நாளைக்கு 200 – 250 கிலோ உணவு உண்ணும்.
- ஒரு நாளைக்கு 100 – 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும்.
- அதன் 250 கிலோ உணவில் 10% விதைகள் இருக்கும்
- அதன் சாணத்திலிருந்து 10 கிலோ விதைகளும் குச்சிகளும் மீண்டும் மண்ணில் விதைக்கப்படும்.
- ஒரு யானை, ஒரு நாளைக்கு 300 – 500 விதைகளை விதைக்கிறது.
- ஒரு யானை ஒரு மாதத்திற்கு 3000 மரங்களை நடுகின்றது.
- ஆக ஒரு யானை ஒரு காட்டையே உருவாக்குகிறது.