ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பானது (UNESCO), ஐக்கிய நாடுகள் அவையின் முக்கிய துணை நிறுவனங்களில் ஒன்று.

1945 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி உருவான இந்நிறுவனம், இதன் உறுப்பு நாடுகளிடையே கல்வி, அறிவியல், பண்பாடு மற்றும் தொடர்புத் துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவித்து வருகிறது.

மேற்படி துறைகள், மனித மனங்களில் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதான நோக்கத்தை அடைவதற்கான வழியாக இருக்கின்றன என்ற அடிப்படையைக் கொண்டே இந்நிறுவனம் இயங்கி வருகின்றது.

இவ்வகையான ஒத்துழைப்பினால் உலகில் அமைதியையும், பாதுகாப்பையும் ஏற்படுத்தி, அதன் மூலம் இன, மொழி, மத, பால் வேறுபாடின்றி, உலக மக்கள் அனைவருக்குமான நீதி, சட்ட விதிமுறைகள், மனித உரிமைகள் மற்றும் ஐக்கிய நாடுகள் உரிமை ஆவணத்தில் அறிவிக்கப்பட்டிருக்கும் அடிப்படை சுதந்திரம் ஆகியவற்றிற்கு உலகளாவிய ரீதியில் கிடைக்கும் மதிப்பை உறுதி செய்வதே இவ்வமைப்பின் நோக்கமாகும்.

கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டின் மூலமாக உலக அளவில் உயர்த்திட ஒத்துழைப்பை நல்கி உலக அமைதிமற்றும் மனித உரிமைகளைக் காக்க உரிய பங்களிப்பைச் செய்வது இதன் நோக்கம் ஆகும்.

ஐக்கிய நாடுகளின் அதிகார பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளபடி இதன் செயல்பாடு அமைந்துள்ளது.

இது அனைத்துலக அறிவார்ந்த கூட்டமைப்பு மற்றும் ஆணைக் குழுவின் வழித் தோன்றல் ஆகும்.

இது 193 உறுப்பு நாடுகளையும் 7 கலந்துகொள்ளும் உறுப்பினர்களையும் கொண்டது.

இது களப்பணி அலுவலகங்கள் மூலமாகவும், 3 அல்லது அதற்கு மேலான நாடுகளின் கூட்டு அலுவலகங்கள் மூலமாகவும் செயல்படுகிறது.

கல்வி, இயற்கை அறிவியல், சமூக மற்றும் மனித அறிவியல், பண்பாடு, செய்தி தொடர்பு போன்ற 5 முக்கிய நிரல்கள் மூலமாக இதன் நோக்கங்கள் நிறைவேற்றப்படுகிறது.

எழுத்து அறிவித்தல் அனைத்துலக அறிவியல் நிகழ்ச்சிகள் நடத்துதல், ஊடகங்கள், அச்சமைப்புகள் ஆகியவற்றின் சுகந்திரத்தைப் பாதுகாத்தல், அந்தந்தப் பகுதியின் பண்பாடு மற்றும் வரலாற்றுத் திட்டங்களை உயர்த்துதல் உலக பண்பாடு மற்றும் இயற்கை மரபுரிமை இவற்றை பாதுகாக்க உலகளாவிய ஒத்துழைப்பு ஆகியவை இதன் திட்டங்கள் ஆகும்.

இது உலக நாடுகளின் முன்னேற்ற குழுவின் ஒரு அங்கம் ஆகும்.

யுனெஸ்கோவின் பொது மாநாடு 1995 ஆம் ஆண்டு பிரான்ஸிலுள்ள பாரீசில் நடைபெற்றபோது உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம் அறிவிக்கப்பட்டது.

1983 ஆம் ஆண்டு, எல்லோரா குகைகள் உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்தது.

1983 – ஆம் ஆண்டு தாஜ்மஹாலானது, யுனெஸ்கோ உலக பாரம்பரிய அமைப்பின், உலக பாரம்பரிய பண்பாட்டுப் தளமாக, ஆசிய-பசிபிக் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டது.

2007 ஆம் ஆண்டு, ஏப்ரல், 25 – ல் இருந்து உலக சுகாதார அமைப்பு, ஆண்டுதோறும் உலக மலேரியா தினத்தினை கடைபிடித்து வருகிறது.

2016 ஆம் ஆண்டு, ஜுலை, 15 ஆம் நாள், நாளாந்தா பல்கலைக்கழகத்தை, யுனேஸ்கோ அமைப்பு உலகப்பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது.