1949, மார்ச், 30 – அன்று, ராஜஸ்தான் மாநிலம் உருவாக்கப்பட்டது.
இந்திய அளவில், பரப்பளவில் முதலிடம் வகிக்கும் மாநிலமாகும்.
ராஜஸ்தான் மாநிலத்தின் பரப்பளவு 3,42,239 சதுர கிலோ மீட்டர்களாகும்.
இம்மாநிலம் இந்தியாவின் வட கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.
மாநிலத்தின் பெறும்பகுதி பாலைவனமாகும்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் மற்றும் இந்தியாவின் ஹரியானா, உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களை எல்லைகளாக கொண்டுள்ளது.
2020, ஆகஸ்ட், 19 ஆம் நாள், இந்தியாவில் 3 விமானநிலையங்கள் லீஸ்க்கு விடப்பட்டுள்ளது. அவையாவன, ராஜஸ்தான் – ஜெய்ப்பூர், கேரளா – திருவனந்தபுரம், அசாம் – கவுகாத்தி விமான நிலையங்கள்; தனியார் – பொதுப்பங்களிப்புடன் இயங்க மத்திய அமைச்சவை அனுமதி அளித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் தாமிரப் படிவு அதிகம் காணப்படுகிறது.
மிகப்பெரிய நகரம் ஜெய்பூர் ஆகும்.
ராஜஸ்தானி, மார்வானி, பஞ்சாபி. உருது மற்றும் ஹிந்தி போன்ற மொழிகள் பேசப்படுகின்றன.
இளஞ்சிவப்பு நகரம் என்று அழைக்கப்படும் இந்திய நகரம் – ஜெய்ப்பூர்
தார் பாலைவனமானது இம்மாநிலத்தில் அமைந்துள்ளது.
உலகின் பழமையான மலைத்தொடர்களில் ஒன்றான ஆரவல்லி மலைத்தொடர் இங்கு அமைந்துள்ளது.
இம்மாநிலத்தில் மொத்தம் 33 மாவட்டங்கள் உள்ளன.
இம்மாநிலதிதில் உள்ள சாம்பார் ஏரி இந்தியாவின் மிகப்பெரிய உவர் ஏரியாகும்.
பாகிஸ்தானுடன் அதிக எல்லையை பகிர்ந்து கொள்ளும் இந்திய மாநிலமாகும்.
பஞ்சாயத்து ராஜ் முதன் முதலில் இம்மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1974, மே, 18 ஆம் நாள் – இம்மாநில தார் பாலைவனத்தில் உள்ள பொக்ரான் எனுமிடத்தில் முதன் முதலாக சிரிக்கும் புத்தர் எனும் பெயரில் இந்தியா தனது முதலாவது அணுகுண்டு சோதனையை நிகழ்த்தியது.
1998, மே, 11 – ஆம் தேதி, ஒவ்வொரு ஆண்டும், பொக்ரானில் நடைபெற்ற அணுகுண்டு சோதனையை நினைவு கூறும் வகையில் தேசிய தொழில்நுட்ப தினமாக கொண்டாடப்படுகிறது.
2021, பிப்ரவரி, 12 – ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் பகுதியில் லேசான நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.3-ஆக பதிவு