லகர ளகர ஈறு

  1. வேற்றுமைப் புணர்ச்சியில் நிலைமொழியீற்று லகரமும் ளகரமும் வல்லின முதன்மொழியோடு புணரும்போது லகரம் றகரமாகத் திரியும். ளகரம் டகரமாகத் திரியும்.

எ.கா :

  • லகரம் றகரமாதல்,

வேல்+காளை = வேற்காளை

  • ளகரம் டகரமாதல்,

திரைகவுள்+பயனில் = திரைகவுட்பயனில்

  • நிலைமொழியீற்று லகரமும், ளகரமும் மெல்லின முதன்மொழியோடு புணரும்போது லகரம், னகரமாகத் திரியும், ளகரம் ணகரமாகத் திரியும்.

எ.கா :

  • லகரம் னகரமாதல்,

கயல்+முள் = கயன்முள்

  • ளகரம் ணகரமாதல்,

அருள்+மொழி = அருண்மொழி

விதி :

“லளவேற் றுமையிற் றடவும் அல்வழி

அவற்றோ டுறழ்வும் வலிவரி னாமெலி

மேவி னணவும் இடைவரின் இயல்பும்

ஆகும் இருவழி யானுமென்ப “           நன்னூல் – 227

எழுத்துஎழுத்து


சொல்


புணர்ச்சி
பொது


அணி


இலக்கியம்
தமிழ் புலவர்கள்