1066 – ஆம் ஆண்டு, இங்கிலாந்தி தலைநகரம் வின்செஸ்டரில் இருந்து, லண்டனுக்கு மாற்றப்பட்து.

1865 – ஆம் ஆண்டு, தாதாபாய் நௌரோஜி அவர்கள் லண்டனில், ‘இந்திய சங்கம்’ (Indian Society) – யை தோற்றுவித்தார்.

1866 – ஆம் ஆண்டு, தாதாபாய் நௌரோஜி அவர்கள் லண்டனில், ‘கிழக்கிந்திய கழகம்’ (East Indian Association) – யை தோற்றுவித்தார்.

1948 ஆம் ஆண்டின் கோடைகால ஒலிம்பிய விளையாட்டுக்கள் இலண்டனில் நிகழ்ந்தன.

2022, ஜூலை, 11,12 – லண்டன் விம்பில்டன் டென்னிஸ் ஒற்றையர் மகளிர் பிரிவில் கஜகஸ்தானின் எலினா ரைபகினா முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நேவாக் ஜேகோவிச் பட்டம் வென்றார். இது அவருடைய 21 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.

2022, செப்டம்பர், 18 – லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் மண்டபத்தில் பிரிட்டன் ராணி எலிசபெத் உடலுக்கு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்.


இலண்டன் (London), ஐக்கிய இராச்சியத்தினதும், இங்கிலாந்தினதும் தலைநகரமாகும்.

ஏழு மில்லியனுக்கு மேற்பட்ட குடித்தொகையைக் கொண்ட பெருநகர் இலண்டன் ஆகும்.

உரோம மாகாணமான பிரித்தானியாவின் தலைநகரமான லண்டனியம் ஆக இருந்து, பிரித்தானியப் பேரரசின் மையமாகத் திகழ்ந்த இலண்டன், இன்று ஐக்கிய இராச்சியத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) 17% ஐப் பங்களிக்கின்றது.

இது உலகின் நான்காவது பெரியதாகும்.

பல நூற்றாண்டுகளாக, இலண்டன், உலகின் முக்கியமான வணிக மற்றும் அரசியல் மையமாகத் திகழ்கின்றது.

இலண்டன் ஒரு முக்கியமான உலக நகரமாக இருப்பதுடன், ஐரோப்பாவில் ஆகக்கூடுதலான நகரத்துக்குரிய மொத்த உள்ளுர் உற்பத்தியுடன் உலகின் மிகப் பெரிய நிதி மையமும் திகழ்கின்றது.

மைய இலண்டன் ஐக்கிய இராச்சியத்தின் மிகப் பெரிய 100 நிறுவனங்களில் பெரும்பாலானவற்றின் தலைமையகங்களைக் கொண்டிருப்பதுடன், ஐரோப்பாவின் மிகப்பெரிய 500 நிறுவனங்களில் 100 நிறுவனங்களின் தலைமையகங்களின் தலைமையகங்களையும் கொண்டுள்ளது.

அரசியல், நிதி, கல்வி, பொழுதுபோக்கு, ஊடகம், கலைகள், பண்பாடு போன்ற துறைகளில் இலண்டனின் செல்வாக்கு அதனை உலகில் முக்கியமான ஒரு நிலையில் வைத்துள்ளது.

இந்நகரம், உள்நாட்டினரதும், வெளிநாட்டினரதும் சுற்றுலாப் பயணத்துக்குரிய இடமாகவும் விளங்குகின்றது.

இலண்டனில் நான்கு உலகப் பாரம்பரியக் களங்கள் அமைந்துள்ளன. இவை,

  • இலண்டன் கோபுரம்
  • பழங்கால கிரீனிச் குடியிருப்புக்கள
  • ராயல் தாவரவியல் பூங்கா
  • வெசுட்மின்சுட்டர் அரண்மனை, வெசுட்மின்சுட்டர் மடாலயம், புனித மார்கிரட் தேவாலயம் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதி என்பனவாகும்.

இலண்டனில் பல வகையான மக்களுடன், பல பண்பாடுகளும், சமயங்களும் நிலவுகின்றன.

இந்நகரத்தின் எல்லைக்குள் 300க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுவதாகச் சொல்லப்படுகின்றது.

இலண்டன் பாதாளத் தொடர்வண்டி வலையமைப்பே உலகின் மிகப்பெரியதும் பழமையானதுமான பாதாளத் தொடர்வண்டி வலையமைப்பு ஆகும்.

உலகில் முதல் முதலாக லண்டனில் பிளாஸ்டிக் அறிமுகப்படுத்தப்பட்டது.

கின்னஸ் புத்தகம் வெளியிடும் அலுவலகம் லண்டனில் உள்ளது.