லாலா லஜபதி ராய் ஒரு எழுத்தாளரும் அரசியல் தலைவரும் ஆவார்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் இவரது பங்குக்காக இவர் பெரிதும் மதிக்கப்படுகிறார்.

இவரை மக்கள் பஞ்சாப் சிங்கம் எனவும் அழைப்பதுண்டு.

லால்-பால்-பால் என்று அழைக்கப்படும் மூன்று முக்கியத் தலைவர்களுள் இவரும் ஒருவராவார். மற்ற இருவர் பால கங்காதர திலகர் மற்றும் பிபின் சந்திர பால் ஆவர்.

‘லாலா லஜபத் ராய்’ பஞ்சாப் தேசிய வங்கி மற்றும் “லட்சுமி காப்புறுதி கம்பெனி” ஆகியவற்றை நிறுவியவரும் ஆவார்.

இவர் 1888 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.

அக்காலத்தில், தீவிரமான இந்து தேசியவாதிகளாக விளங்கிப் போராட்டக் காலத்திலேயே தமது உயிர்களைக் கொடுத்த முக்கியமான மூவருள் இவரும் ஒருவர்.

ஏனையோர் மகாராட்டிரத்தைச் சேர்ந்த பால கங்காதர திலகரும், வங்காளத்தைச் சேர்ந்த பிபின் சந்திர பாலும் ஆவர். கூட்டாக இம்மூவரையும் லால்-பால்-பால் என அழைப்பர்.

ராய், இன்றைய இந்து தேசியவாதக் கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் முன்னோடியான இந்து மகாசபையின் உறுப்பினராகவும் இருந்தார்.

1905 ஆம் ஆண்டின் வங்காளப் பிரிவினை இவரது தேசிய உணர்வைத் தூண்டியதுடன், விடுதலைக்காகப் போராடும் பாதையில் அவரை உறுதியாக நிற்கவும் வைத்தது.

பிரித்தானிய அரசின் அடக்கு முறைகள், மக்கள் மத்தியில் தேசிய எழுச்சியையும், தன்மான உணர்வையும் தூண்டுவதில் அவர்களுக்கு மன உறுதியைக் கொடுத்தது.

லாலா உள்ளிட்ட முன் குறிப்பிட்ட மூவரும், பிரித்தானியரிடம் இருந்து ஓரளவு தன்னாட்சியைக் கோரினர்.

இது அக்காலத்தில் புரட்சிகரமானதாகக் கருதப்பட்டது. முழுமையான அரசியல் விடுதலையை முதன் முதலில் கோரியவர்களும் இவர்களே.

யங் இந்தியா என்ற பத்திரிக்கையை வெளியிட்டவர் – லாலா லஜபதிராய்.

அக்டோபர் 1928ல் இரண்டாவது முறையாக மீண்டும் சைமன் கமிசன் இந்தியா வந்த போது போராட்டங்கள் தீவிரமடைந்தன. அத்தகைய ஒரு போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய தடியடியில் காயமடைந்த லாலா லஜபத் ராய் மரணமடைந்தார்.