லிபியா (Libya, அரபு மொழி: ‏ليبيا) வட ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு.

இதன் வட எல்லையாக மத்திய தரைக்கடலும் கிழக்கில் எகிப்து, தென்கிழக்கில் சூடான், தெற்கில் சாட், நைஜீரியா ஆகியனவும், மேற்கில் அல்ஜீரியா, துனீசியா ஆகியனவும் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் தலைநகர் திரிப்பொலி ஆகும்.

ஏறத்தாழ 1,800,000 சதுர கிலோமீட்டர்கள் (700,000 sq mi) பரப்பளவுள்ள லிபியா ஆபிரிக்க நாடுகளில் பரப்பளவைக் கொண்டு நான்காவது பெரிய நாடாகும்; உலகளவில் 17வது பெரிய நாடாகும்.

இதன் மூன்று பாரம்பர்ய பகுதிகள் திரிப்பொலித்தானியா, ஃபெசான் மற்றும் சைரநைக்கா ஆகும்.

லிபியாவின் மனிதவள குறியீடு ஆபிரிக்காவிலேயே மிகக்கூடுதலானதாகும்.

2009ஆம் ஆண்டு நிலவரப்படி, சீசெல்சு, எக்குவடோரியல் கினி மற்றும் காபொன்னை அடுத்து மிகக் கூடுதலான தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (கொள்வனவு ஆற்றல் சமநிலை) கொண்டுள்ளது.

இவற்றிற்கு பெரும் பெட்ரோலிய இருப்பும் குறைந்த மக்கள்தொகையுமே காரணங்களாக அமைகின்றன.

உலகின் செல்வமிக்க பத்து எண்ணெய் உற்பத்தி நாடுகளில் லிபியா ஒன்றாகத் திகழ்கிறது.

உலக உற்பத்தியில் 2% லிபியாவினுடையதாகும்.

தலைநகரம் – திரிப்பொலி

ஆட்சிமொழி – அரபு

பேச்சு மொழி – லிபிய அரபு, பெர்பெர்

மக்கள் – லிபியர்

அரசாங்கம் – இடைக்கால அரசு

சட்டமன்றம் – தேசிய இடைக்காலப் பேரவை

1922, செப்டம்ர், 13 – அன்று ஆப்ரிக்காவிலுள்ள லிபியவில் காற்றின் வெப்பநிலையனது 59 டிகிரி செல்சியஸ் என்று கணிக்கப்பட்டு இருந்தது.

1947, பிப்ரவரி, 10 – இத்தாலியிடமிருந்து, லிபியா விடுதலை பெற்றது.

1951, டிசம்பர், 24 – ஐக்கிய இராச்சியம், மற்றும் பிரன்ஸ் இடமிருந்து லிபியா இராச்சியம் என விடுதலை பெற்றது.

1969 ஆம் ஆண்டு முவாம்மர் அல்-கடாபி ஓர் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார்.

2011ஆம் ஆண்டு எகிப்தின் மக்கள்புரட்சியை அடுத்து பிப்ரவரியில் லிபியாவிலும் கடாபியின் அரசுக்கெதிராக மக்கள் எதிர்ப்புப் போராட்டங்கள் வலுப்பெற்றன.

2011, செப்டம்பர், 20 – லிபிய நாட்டை சர்வாதிகார முறையில் ஆட்சிசெய்துவந்த சர்வாதிகாரியான கடாபி (Mummar al Quddafi), சர்வதேச இராணுவத்தின் உதவியுடன் அந்நாட்டு புரட்சிப்படையினரால் கொல்லப்பட்டார்.

2011 ஆம் ஆண்டு லிபிய உள்நாட்டுப் போரை அடுத்து 34 ஆண்டு கால முஆம்மர் கடாபியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு லிபியா தேசிய இடைக்காலப் பேரவையின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது.