- அலகு – பறவையின் மூக்கு, அளவு, ஆண்பனை
- அழகு – வனப்பு
- அளகு – சேவல், பெண்கூகை
- அழம் – பிணம்
- அலம் – கலப்பை
- அளம் – உப்பு
- அழி – அழித்துவிடு
- அலி – பேடி, காகம், விருச்சிகராசி
- அளி – கருணை, கள், வண்டு
- அலை – கடல் அலை, அலைந்து திரிதல்
- அழை – கூப்பிடு
- அளை – தயிர், பிசை
- இலை – மரம், செடி, கொடிகளின் இலை
- இழை – செய், நூல் இழை
- இளை – மெலிந்து போதல்
- உலவு – நட
- உளவு – ஒற்று
- உழவு – கலப்பையால் உழுதல்
- உலு – தானியப் பதர்
- உழு – நிலத்தை உழு
- உளு – உளுத்துப் போதல்
- உலை – சமைக்க உலை வைத்தல், உலைக்களம்
- உழை – பாடுபடுதல், உழைப்பு
- உளை – பிடரிமயிர், சேறு
- ஒலி – ஓசை
- ஒழி – அழித்துவிடு, தொலைத்து விடு
- ஒளி – வெளிச்சம், பதுங்கிக் கொள்
- கலி – கலியுகம், பாவகை, சனி
- கழி – கோல், மிகுதி, உப்பளம்
- களி – மகிழ்வு, இன்பம்
- கலை – வித்தை, கலைந்து போதல்
- கழை – மூங்கில்
- களை – வயலில் களையெடுத்தல், முகத்தின் ஒளி
- காலி – ஒன்றுமில்லாதது, வெற்றிடம்
- காளி – துர்க்கை, மாயை
- காழி – சீர்காழி (ஊர்)
- கிலி – அச்சம், பலம்
- கிழி – துண்டாகக் கிழித்தல், கோடு கிழித்தல்
- கிளி – ஒரு பறவை
- குலி – மனைவி
- குழி – பள்ளம், பாத்தி, பன்னீரடிச் சதுரம், வயிறு
- குளி -நீராடு
- குலவி – மகிழ்ந்திருத்தல்
- குழவி – குழந்தை, இளமை, யானைக் கன்று அம்மிக்கல்
- குளவி – ஒரு வண்டு, காட்டுமல்லி
- கொலு – அரசசபை, திருவோலக்கம்(தெய்வசபை), உல்லாசமாக வீற்றிருத்தல்
- கொழு – மழு, கலப்பையில் மாட்டும் பெரிய இரும்பு, கொழு கொழுத்து இருத்தல்
- கொளு – புறப்பொருள் வெண்பாமாலைத் துறை, பொருந்துவாய்
- கோலை – மிளகு
- கோழை – வீரமற்றவன், கபம்
- கோளை – குவளை, எலி
- கோலி – இலந்தை, விளையாடும் குண்டு
- கோழி – உறையூர், விட்டில், பறவை
- கோளி – பூவாது காய்க்கும் மரம், ஆத்தி, ஆலம்
- சாலை – பாடசாலை, பொது மண்டபம், அறக்கூடம்
- சாளை – கடல்மீன்
- சாழை – குடிசை, குச்சு
- சூல் – கர்ப்பம்
- சூழ் – சூழ்ந்துகொள், சுற்று
- சூள் – சபதம்
- சோலி – ரவிக்கை, காரியம்
- சோழி – பலகரை
- சோளி – கூடைவகை
- தலம் – இடம், பூமி
- தழம் – தைலம்
- தளம் – மேடை, மாடி வீட்டின் அடுக்கு
- தலை – முதன்மை, சிரசு
- தழை – புல், இலை முதலியன
- தளை – கட்டுதல்
- தாலி – கணவன் மனைவிக்குக் கட்டும் சின்னம்
- தாழி – குடம், வாயகன்ற பாண்டம்
- தாளி – ஒருவகைப் பனை, குழம்பு தாளித்தல்
- துலி – பெண் ஆமை
- துழி – பள்ளம்
- துளி – மழைத்துளி, திவலை, சிறிய அளவு
- தோலி – பிசின், ஒருவகை மீன்
- தோழி – பாங்கி, நட்பால் நெருக்கமானவள்
- தோளி – அவுரி (ஒருவகை குத்துச்செடி), அரக்கு
- நாலம் – பூவின் காம்பு
- நாழம் – இழிவுரை, வசவு
- நாளம் – பூந்தண்டு, உட்துளை, ரத்தநாளம்
- நாலி – முத்து, கந்தை ஆடை
- நாழி – உள்தொளையுள்ள பொருள், ஒருபடி, ஏர், அம்பறாத்துணி, நாடா, பூரட்டாதி
- நாளி – கல், நாய்
- நால் – நான்கு
- நாழ் – குற்றம், செருக்கு
- நாள் – காலம், திதி
- பாலி – தானியக் குவியல், தூற்றாத தானியம்
- பாழி – கொடுத்தல், ஈதல்
- பாளி – வரப்பு, எல்லை
- முலை – உடலிலுள்ள ஓர் உறுப்பு
- முழை – குகை
- முளை – முளைத்தல், தறி, ஆப்பு, அங்குசம், இளமை, தண்டு, மூங்கில்
- மாலி – மொளலி கிரீடம்
- மாழி – மேழி, கலப்பை
- மாளி – துணிமூட்டை
- வலி – நோய், வலிமை, துன்பம்
- வழி – நெறி, பாதை, தடம், உபாயம்
- வளி – காற்று
- வலை – மீன் பிடி வலை
- வழை – ஒருவகை மரம், சுரபுன்னை மரம்
- வளை – பொந்து, வளையல், வளைவு
- வலு – வலிமை, பலம், பற்று
- வழு – குற்றம், தவறு, பழிப்புரை, கேடு
- வளு – இளமை, இளைய
- வாலி – கிஷ்கிந்தை அரசன் (இராமாயணம்)
- வாழி – வாழ்க (எனவாழ்த்துதல்)
- வாளி – அன்பு, வட்ட வாள், வீரன், ஒரு காதணி
- வால் – விலங்கின் வால்பகுதி, வெண்மை
- வாழ் – உயிர்வாழ், பிழைத்திரு
- வாள் – வெட்டும் கருவி, ஒளி பொருந்திய
- வாலை – இளம்பெண், திராவகம் வடிக்கும் பாத்திரம், ஒரு சக்தி
- வாழை – மரவகை
- வாளை – மீன்வகை
- விலா – விலா எலும்பு
- விழா – திருவிழா, கொண்டாட்டம்
- விளா – இளமை, வெண்மை, நிணம்
- விலை – மதிப்பு, விலைக்கு விற்றல்
- விழை – விரும்பு, ஆசைப்படு
- விளை – ஒரு மீன்வகை, விளைவி (விளைச்சல்)
அரேபியா ஆசியா ஆன்மீகம் இலக்கணம் உடல்நலம் உணவு உலோகம் ஐசக் நியூட்டன் ஒலிம்பிக் கடன் மோசடி கால்பந்து கிரிக்கெட் சட்டம் சாலைவிதி சிந்தனைகள் சிறுகதை சென்னை செயற்கைக்கோள் ஜெருசலேம் டாலர் டென்னிஸ் தகவல் தொழில்நுட்பம் தமிழர்கள் தமிழ் திருத்தலம் தென் அமெரிக்கா தேர்தல் நகைச்சுவை நாடுகள் நிலா பழமொழி புத்தகம் புத்தர் புற்றுநோய் பெண்கள் பொது அறிவு போர் மருத்துவம் மாநிலம் முக்கிய தினங்கள் வங்கித்தாள் வழக்கு வாக்கெடுப்பு வானியல் விபத்து