1971 ஆம் ஆண்டு, இந்தியாவின் உதவியுடன் பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் அடைந்தது.

இப்போரின் பெயர் பசந்தர் போர் ஆகும்.

வங்கதேசத் தலைகர் டாக்கா ஆகும்.‍‍

பெங்காலி தேசிய மொழியாகும்.

வங்காளப் புலிகள் இந்நாட்டின் தேசிய சின்னமாகும்.

இங்கு கிரிக்கெட் மிகப்பிரபலமான விளையாட்டு ஆகும்.

வங்கதேச கிரிக்கெட் அணி 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் ‍தொடரில் முதன்முதலாக பங்குபெற்றது.

2000 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்குபெற தகுதிபெற்றது.

வங்கதேசத்தில் பாதிக்கும் மேற்றபட்ட மக்கள் விவசாயத்தையே பிரதான தொழிலாக கொண்டுள்ளனர்.

ஆடைகள் ஏற்றுமதியின் மூலம் ஏற்றுமதி வருவாய் பெருமளவு பெறுகிறது.

ஏறத்தாழ 2000 பருவ இதழ்கள் மற்றும் தினசரி பத்திரிக்கைகள் இங்கு பிரசுரிக்கப்படுகிறது. இத்தனைக்கும் சராசரி வாசகர்கள் 15% சதவீதத்தினரே.

இங்கு ஆறுவகையான பருவநிலைகள் காணப்படுகிறது.

இந்தியாவின் மாநிலங்களான மேற்கு வங்காளத்தை மேற்கு மற்றும் வடக்கிலும், அஸ்ஸாம் மாநிலத்தை வடக்கிலும், மேகாலயா மாநிலத்தை வடக்கு மற்றும் வடக்கிழக்கிலும், திரிபுரா மற்றும் மிசோரம் மாநிலங்களை கிழக்கிலும் , தெற்கில் வங்காள விரிகுமாவையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

வங்காள விரிகுடாவானது உலகின் மிகப்பெரிய வளைகுடாவாகும்.

இவர்கள் இடது கையினை தூய்மையற்ற ஒன்றாக கருதுவதால் அனைத்து வேலைகளுக்கும் வலது கையினையே பயன்படுத்துகின்றனர்.

வங்காள தேசத்தின் தேசிய விலங்கு புலி ஆகும்.

இந்தியாவுடம் மிக நீண்ட எல்லையை பகிர்ந்துகொள்ளும் நாடு வங்காளதேசம் ஆகும்.

1985, மே, 25 – அன்று வங்காளதேசத்தில் வீசிய சூறாவளி காற்றினால் சுமார் 11,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

1991 – ஆம் ஆண்டு, சிட்டகாங் மாவட்டத்தை புயல் தாக்கியதில் சுமார் 1,39,000 க்கும் மேற்பட்ட மக்கள் பலியாயினர்.