தமிழரசிக் குறவஞ்சியை இயற்றியவர் தேரமங்கலம் திரு.மு.வரதநஞ்சையப்பப் பிள்ளை ஆவார்.

1877, செப்டம்பர், 01 – அன்று, அப்பாசாமிப்பிள்ளை, வரதாயி என்பாருக்கு மகனாகப் பிறந்தார்.

தெலுங்கையும், வடமொழியையும் நன்கு அறிந்தவர்.

விரைந்து கவி பாடுவதில் வல்லவர்.

கரந்தை தமிழ்ச் சங்கத்தில் ‘ஆசிரியர்’ என்னும் சிறப்புப் பட்டம் பெற்றவர்.

கற்றோரால் ‘புலவரேறு’ என்று சிறப்பிக்கப்பெற்றார்.

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் நமச்சிவாய முதலியார் தலைமையில் ‘தங்கத் தோடா’ பரிசளிக்கப் பெற்றார்.

தமிழ்வேள் உமாமகேசுவரனார் இவரிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, இவர் தமிழரசி குறவஞ்சியை இயற்றினார்.

அந்நூலைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழாவின் பொழுது ஞானியாரடிகள் தலைமையில் அரங்கேற்றினார்.

1956, ஜூலை, 11 அன்று, புலவரேறு மு.வரதநஞ்சையப்பப் பிள்ளை அவர்கள் புகழுடம்பு எய்தினார்.