வாழைப்பழம் (banana) என்பது தாவரவியலில் சதைப்பற்றுள்ளக் கனியும், வாழைப் பேரினத்தில் உள்ள பெரும் குறுஞ்செடி வகைப் பூக்கும் தாவரத்தில் உற்பத்தியாகும் உண்ணத்தக்க பழமாகும்.

மா, பலா, வாழை என்று முக்கனிகளில் கடைசி பழமாக இருந்தாலும் உலக மக்களால் தினம் விரும்பி சாப்பிடப்படும் முதல் பழம் வாழைப்பழமே.

எந்த காலத்திலும் எப்போதும் எந்த இடத்திலும் கிடைக்கக்கூடிய இனிய பழம் இது சுபகாரியங்கள் அனைத்திலும் முதலிடம் பெறுவது இப்பழம் குழந்தைகள் முதல் குடுகுடு கிழவன் விரும்பி உண்ணும் பழம் சில நாடுகளில் இது சமைக்கும் வாழைக் காய்களாகப் பயன்படுத்தப்படுகிறது.

இப்பழங்கள் அளவு, நிறம், கெட்டியான தன்மை என்பவற்றால் பல வகைகளாக உள்ளபோதிலும், அவை பொதுவாக நீண்டு வளைந்திருக்கும்.

மிருதுவாக சதையைக் கொண்ட இது மஞ்சள், பச்சை, சிவப்பு, பளுப்பு, ஊதா நிறத் தோல்களினால் மூடப்பட்டிருக்கும்.

சூரியனை நோக்கி வளருவதால் வாழைப்பழங்கள் பொதுவாக வளைந்து காணப்படுகின்றன.


வாழைப்பழம் உற்பத்தி செய்யும முதல் 10 நாடுகள் (2023 நிலவரப்படி)

நாடுஎண்ணிக்கை (டன்)
இந்தியா3,30,62,000
சீனா1,17,24,200
இந்தோனேசியா87,41,147
பிரேசில்68,11,374
ஈக்வடார்66,84,916
பிலிப்பைன்ஸ்59,42,215
அங்கோலா43,45,799
குவாத்தமாலா42,72,645
தான்சானியா35,88,510
கோஸ்டா ரிக்கா25,56,767