விமானம்1911, பிப்ரவரி, 18 – அன்று, முதலாவது அதிகாரபூர்வமான விமான அஞ்சல் சேவை இந்தியாவில் அலகாபாத்தில் ஆரம்பமானது.

1932, அக்டோபர், 10 – அன்று, டாடா ஏர்லைன்ஸ் தனது முதல் விமான சேவையைத் தொடங்கியது.

1985, ஜூன், 23 – கனடாவிலிருந்து புறப்பட்டு இந்தியா நோக்கி வந்து கொண்டு இருந்த கனிஷ்கா விமானம், தீவிரவாதிகளால் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இதில், 329 பேர் பலியாயினர்.


2003, அக்டோபர், 23 – அன்று, பிரிட்டிஷ் ஏர்வேஸ், தனது, சூப்பர்சோனிக் பயணிகள் விமானசேவையை நிறுத்தியது.

2021, டிசம்பர், 03 – வாரணாசி, பூனே, கொல்கத்தா மற்றும் விஜயவாடா ஆகிய 4 விமான நிலையங்களில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல், பையோமெட்ரிக் போர்டிங் நடைமுறை மூலம் பயணிகள் விமானப் பயணம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

2021, டிசம்பர், 29 – கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியீடு. விமான போக்குவரத்துக்கு உகந்த இடம், விமானநிலையம் அமைக்க வசதிகள் கொண்ட இடங்களை தேர்வு செய்ய முடிவு .

2022, ஆகஸ்ட், 02 – ஶ்ரீபெரும்புத்தூருக்கு அருகிலுள்ள பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க முடிவு.

2022, செப்டம்பர், 05 – விமான நிலையங்களில் 3,049 சி.ஐ.எஸ்.எப். பாதுகாப்பு வீரர்களின் பணியிடங்கள் ரத்து செய்யப்படுகிறது. தனியார் செக்யூரிட்டிகளை நியமிக்க மத்திய அரசு முடிவு.


இந்தியாவின் முதல் விமான சேவையை இம்பீரீயல் ஏர்வேஸ் நிறுவனம் வழங்கியது.