1610, ஜனவரி, 07 – அன்று, கலீலியோ கலிலி ஜூபிட்டர் கோளின் துணைக்கோளை கண்டறிந்தார்.

வியாழன் கோளானது சூரியனிலிருந்து ஐந்தாவதாக அமைந்துள்ள கோள் ஆகும்.

இது சூரியக் குடும்பத்தில் மிகப்பெரிய கோள் ஆகும்.

சூரியக் குடும்பத்தில் உள்ள மற்ற கோள்களை இணைத்தால் கிடைக்கும் நிறையை விட இரண்டரை மடங்கு அதிகமானதாகும். 

இது முழுவதும் வாயுவால் ஆன கோள் ஆகும்.

இது சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் மிக அதிக காந்த புலத்தை கொண்டுள்ளது.

வியாழனுக்கு 79 அறியப்பட்ட நிலவுகள் உள்ளன, அவற்றுள் பெரிய நிலவான கனிமீடின் விட்டம் புதன் கோளை விடப் பெரியதாகும்.

புவி தன்னைத் தானே சுற்றிக் கொள்ள 24 மணி நேரமாகும் போது, மிகப்பெரிய வடிவம் கொண்ட வியாழன் 9 மணி 50 நிமிட நேரத்தில், அதாவது நொடிக்கு 8 மைல் வேகத்தில் வெகு விரைவாகத் தன்னைத் தானே சுற்றி விடுகிறது.

சூரிய சுற்றுப்பாதையில், சுமார் 484 மில்லியன் மைல் தூரத்தில், சுமார் 12 புவி ஆண்டுகளுக்கு ஒருமுறை வியாழன் சூரியனைச் சுற்றி வருகிறது.

புவியிலிருந்து சுமார் 97 மில்லியன் மைல் தொலைவில் கதிரவனைச் சுற்றும் வியாழன், புவியின் விட்டத்தைப் போல் 11 மடங்கு விட்டத்தைக் கொண்டது. வியாழனின் நிறை புவியைப் போல் சுமார் 318 மடங்கு அதிகமானது. இது புவியீர்ப்பு விசையை விட 2.5 மடங்கு ஈர்ப்பு விசை பெற்றது.

இந்த வளிமம் பெருங்கோளின் நடுவரை விட்டம் சுமார் 88,700 மைல். சற்று சப்பையான துருவ விட்டம் சுமார் 83,000 மைல். வாயுக் கோளமான வியாழன், மிகக் குன்றிய நேரத்தில் (9 மணி 50 நிமிடம்) தன்னைத் தானே வெகு வேகமாய்ச் சுற்று்வதால் தான் துருவங்கள் சற்றுத் தட்டையாய் உள்ளன.

ஹைட்ரஜன் வாயுவால் முதன்மையாகவும் மேலும் ஹீலியத்தாலும் நிரப்பப்பட்டுள்ள வியாழன், இவ்வளிமங்களின் கடும் அழுத்ததால் அழுத்தப்பட்ட நிலையில் சில தனிமப்பாறைகளாலான உள்ளகமும் கொண்டது.

வியாழனின் புற வளிமண்டலம், அதன் வெவ்வேறு குறுக்குக்கோடுகளில் பலவிதமான வளிமப்பட்டைகளால் நிரம்பியுள்ளதால் கடும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.

இதன் விளைவாகவே, வியாழனின் மிகப்பிரபலமான பெருஞ்சிவப்புப் பிரதேசம் உருவானது. இந்த பெருஞ்சிவப்புப் பிரதேசம் என்ற மாபெரும் புயல் கிட்டத்தட்ட 17 ஆம் நூற்றாண்டில் தொடங்கி இன்றளவும் வீசி வருகின்றது.

இக்கோளில் காணப்படும் மிகப்பெரிய சிவப்புநிறப் பகுதியானது, மரியானா அகழியை விட 40 மடங்கு ஆழமானது ஆகும்.

2003, செப்டம்பர், 21 – கலிலியோ விண்கல திட்டம் இடைநிறுத்தப்பட்டு அது வியாழன் கோளின் வளிமண்டலத்தினுள் அனுப்பப்பட்டு அதனுடன் மோதப்பட்டது.