வில்லியம் சேக்சுபியர் (திருமுழுக்கு: 26 ஏப்ரல் 1564 – இறப்பு: 23 ஏப்ரல் 1616) ஒரு ஆங்கிலக் கவிஞரும் நாடக ஆசிரியருமாவார்.
ஆங்கில மொழியின் மிகப்பெரும் எழுத்தாளர் என்றும் உலகின் மிகப் புகழ்வாய்ந்த நாடக ஆசிரியர் என்றும் இவர் குறிப்பிடப்படுகிறார்.
அநேக சந்தர்ப்பங்களில் இங்கிலாந்தின் தேசியக் கவிஞர் என்றும் இவர் அழைக்கப்படுகிறார்.
வாழும் அவரது படைப்புகளில் 38 நாடகங்கள், 154 செய்யுள் வரிசைகள், இரண்டு நெடும் விவரிப்பு கவிதைகள், மற்றும் பல பிற கவிதைகள் அடங்கும்.
அவரது நாடகங்கள் உலகில் ஒவ்வொரு பெரிய மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
வருடந்தோறும் வேறு எந்த ஒரு நாடகாசிரியரின் நாடகங்களை விடவும் அதிகமாக நடத்தப்படுகிறது.
ஸ்ட்ராட்ஃபோர்டு-அபான்-அவான் என்கிற இடத்தில் தான் சேக்சுபியர் பிறந்தார், வளர்ந்தார்.
18 வயதில், அவர் ஆனி ஹதாவேயை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு மூன்று குழந்தைகள்: சுசானா, மற்றும் இரட்டையர்களான ஹேம்னட் மற்றும் ஜூடித்.
1585 மற்றும் 1592 ஆம் ஆண்டுகளுக்கு இடையே, லண்டனில் ஒரு நடிகர், எழுத்தாளர் மற்றும் லார்டு சாம்பர்ளின்’ஸ் மென் என்ற நாடக நிறுவனத்தின் பங்குதார் என வெற்றிகரமாகத் தன் வாழ்க்கையைத் துவங்கினார்.
இந்த நாடக நிறுவனம் பின்னாளில் கிங்’ஸ் மென் நாடக நிறுவனம் என்று ஆனது.
1613 ஆம் ஆண்டு வாக்கில் அவர் ஸ்ட்ராட்போர்டில் ஓய்வுற்றதாக கருதப்படுகிறது.
மூன்று வருடங்களுக்குப் பின் அங்கு அவர் மரணமெய்தினார்.
சேக்சுபியரின் அந்தரங்க வாழ்க்கை குறித்த சில பதிவுகளே பிழைத்திருக்கின்றன.
எனவே அவரது உடல் தோற்றம், பாலின விருப்பம், மத நம்பிக்கைகள், மற்றும் அவரது படைப்புகளாகக் கூறப்படுவன மற்றவர்களால் எழுதப்பட்டதா போன்ற விடயங்களில் குறிப்பிடத்தக்க அளவு ஊகங்கள் நிலவுகின்றன.
சேக்சுபியர் தனது அறியப்பட்ட படைப்புகளில் அநேகமானவற்றை 1589 மற்றும் 1613 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தான் உருவாக்கினார்.
அவரது ஆரம்ப நாடகங்கள் முக்கியமாக நகைச்சுவை மற்றும் வரலாறுகள் என பல பிரிவுகளைத் தொட்டது.
பின் சுமார் 1608 வரை அவர் துன்பியல் நாடகங்களை பிரதானமாக எழுதினார்.
ஹேம்லட் , கிங் லியர் , மற்றும் மெகாபெத் ஆகிய ஆங்கில மொழியின் மிகச் சிறந்த படைப்புகளாகக் கருதப்படும் சிலவும் இதில் அடங்கும்.
தனது இறுதிக் காலகட்ட சமயத்தில், அவர் துன்பியல்நகைச்சுவைகளை எழுதினார்.
இவை அரிய நிகழ்வுகளுடனான வீரக் காதல் காவியங்கள் என்றும் கூறலாம்.
மற்ற நாடகாசிரியர்களுடனும் இணைந்து பணியாற்றினார்.
அவரது நாடகங்களில் பலவும் அவரது ஆயுள்காலத்தில் பல்வேறு தரம் மற்றும் துல்லியங்களுடனான பதிப்புகளில் வெளியானது.
1623 ஆம் ஆண்டில், அவரது முன்னாள் நாடக அரங்க சகாக்களில் இருவர் ஃபர்ஸ்ட் ஃபோலியோ என்னும் அவரது நாடகப் படைப்புகளின் தொகுப்பை வெளியிட்டனர்.
இதில் இப்போது சேக்சுபியரது படைப்புகள் என்று அறியப்படும் நாடகப் படைப்புகளில் இரண்டைத் தவிர மற்ற அனைத்தும் அடங்கியிருந்தது.
சேக்சுபியர் தனது காலத்திலேயே மதிப்புமிகுந்த கவிஞராகவும் நாடக ஆசிரியராகவும் இருந்தார்.
எனினும் பத்தொன்பதாவது நூற்றாண்டின் இறுதி வரை அவரது மதிப்பு இன்றைய உயரத்தில் இருக்கவில்லை.
குறிப்பாக காதல்வீரக் காவியங்கள் சேக்சுபியரின் திறமையைப் போற்றின. விக்டோரியா காலத்தவர்கள் சேக்சுபியரை மரியாதையுடன் புகழ்ந்து போற்றினர்.
இருபதாம் நூற்றாண்டில் அவரது படைப்புகள் பல்வேறு இயக்கங்கள் மூலமும் எடுத்தாளப் பெற்றன.
அவரது நாடகங்கள் இன்று மிகவும் புகழ்மிக்கவையாக திகழ்வதோடு, உலகெங்கிலும் பன்முக கலாச்சார மற்றும் அரசியல் பொருளில் தொடர்ந்து படிக்கப்பட்டும், மறுபுரிதல் கொள்ளப்பட்டும் வருகின்றன.
சிந்து சமவெளி நாகரிகம் (கி.மு. 3000 – கி.மு. 2500)
மகாவீரர் (கி.மு. 599 – கி.மு. 527)
கௌதம புத்தர் (கி.மு. 563 – கி.மு. 483)
கனிஷ்கர் ( கி. பி 127 முதல் 163 )
நாளந்தா பல்கலைக்கழகம் (கி.பி. 415 – கி.பி. 455)
கி.பி. 1201 முதல் கி.பி 1500 ஆண்டு வரை
கில்ஜி வம்சம் (கி.பி. 1290 – கி.பி. 1320)
துக்ளக் வம்சம் (கி.பி 1321 – கி.பி. 1413)
விஜயநகரப் பேரரசு (கி.பி. 1336 – கி.பி. 1646)
கி.பி. 1501 முதல் கி.பி 1700 ஆண்டு வரை
கி.பி. 1701 முதல் கி.பி 1800 ஆண்டு வரை
வில்லியம் பெண்டிங் (1774 – 1839)
வெல்லெஸ்லி (1760 – 1842)
வீர பாண்டிய கட்டபொம்மன் (1760 – 1799)
இராஜாராம் மோகன்ராய் (1772 – 1833)
மருது சகோதரர்கள் (1785 – 1801)
கி.பி. 1801 முதல் கி.பி 1850 ஆண்டு வரை
இரண்டாம் ஆங்கிலேய மராத்திய போர் (1803)
சர் ஆர்தர் காட்டன் (1803 – 1899)
கானிங் பிரபு (1812 – 1862)
கார்ல் மார்க்ஸ் (1818 – 1883)
தாதாபாய் நௌரோஜி (1825 – 1917)
வேதநாயகம் பிள்ளை (1826 – 1889)
ரிப்பன் பிரபு (1827 – 1909)
ஆல்பிரட் நோபல் (1833 – 1896)
இராமகிருஷ்ண பரமஹம்சர் (1836 – 1886)
பக்கிம் சந்திர சட்டர்ஜி (1838 – 1894)
ஜேம்ஸ் திவார் (1842 – 1923)
W.C.பானர்ஜி (1844 – 1906)
கி.பி. 1851 முதல் கி.பி 1900 ஆண்டு வரை
மனோன்மணீயம் பெ. சுந்தரனார் (1855 – 1897)
தமிழ் தாத்தா உ.வே.சா (கி.பி. 1855 – கி.பி. 1942)
பண்டித ராமாபாய் (1858 – 1922)
சர் ஜகதீஷ் சந்திர போஸ் (1858 – 1937)
கர்சன் பிரபு (1859 – 1925)
பியரி கியூரி (1859 – 1906)
இரவீந்திரநாத் தாகூர் (1861 – 1941)
சுவாமி விவேகானந்தர் (1863 – 1902)
கோபாலகிருஷ்ன கோகலே (1866 – 1915)
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (1867 – 1954)
ஜார்ஜ் கிளாட் (1870 – 1960)
வ.உ.சிதம்பரம் (1872 – 1936)
மார்க்கோனி (1874 – 1937)
சர்தார் வல்லபாய் பட்டேல் (1875 – 1950)
மு.வரதநஞ்சையப்பப் பிள்ளை (1877– 1956)
மூவாலூர் இராமாமிர்தம் (1883 – 1962)
நீல்ஸ் போர் (1885 – 1962)
ராஷ் பிஹாரி போஸ் (1886 – 1945)
முத்துலெட்சுமி ரெட்டி (1886 – 1968)
சீனிவாச இராமானுஜன் (1887 – 1920)
நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார் (1888 – 1972)
அடால்ப் ஹிட்லர் (1889 – 1945)
கான் அப்துல் கபார் கான் (1890 – 1988)
மேகநாத சாஃகா (1893 – 1956)
உடுமலை நாராயணகவி (1899 – 1981)
அம்பேத்கர் (1891 – 1956)
கி.பி. 1901 முதல் கி.பி 1951 ஆண்டு வரை
லால் பகதூர் சாஸ்திரி (1904 – 1966)
சி.பா.ஆதித்தனார் (1905 – 1981)
சுசேதா கிருபாலினி (1908 – 1974)
சுப்பிரமணிய சந்திரசேகர் (1920 – 1995)
அன்னை தெரேசா (1910 – 1997)
முதல் உலகப்போர் (1914 – 1918)
சிறிமாவோ பண்டாரநாயக்கா (1916 – 2000)
நெல்சன் மண்டேலா (1918 – 2013)
ஜாலியன் வாலாபாக் படுகொலை (1919)
ஒத்துழையாமை இயக்கம் (1920 – 1922)
சுயராஜ் கட்சி (1922 – 1935)
சைமன் தூதுக்கழு (1927 – 1928)
சுவாமி தயானந்த சரஸ்வதி (1930 – 2015)
A.P.J. அப்துல் கலாம் (1931 – 2015)
நம்மாழ்வார் (1938 – 2013)
இரண்டாம் உலகப்போர் (1939 – 1945)
வெள்ளையனே வெளியேறு இயக்கம் (1942)
ராஜீவ் காந்தி (1944 – 1991)
கி.பி. 1951 முதல் …
சங்ககால தமிழ் புலவர்கள்
கம்பர் (கி.பி. 12 ஆம் நூற்றாண்டு)