வேலூர் (Vellore) தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநகரமும் வேலூர் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும்.

பாலாற்றின் கரையில் உள்ள வேலூரின் முக்கிய சுற்றுலா இடமாக வேலூர்க் கோட்டை விளங்குகிறது.

வெவ்வேறு காலங்களில் இடைக்காலச் சோழர்கள், பிற்காலச் சோழர்கள், விஜயநகரப் பேரரசர்கள், இராட்டிரகூடர்கள், பல்லவர்கள், முகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் வேலூரை ஆண்டுள்ளனர்.

தோல் தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு சேவைத்துறை நிறுவனங்கள் இந்நகரின் பொருளாதாரத்திற்குப் பெரிதும் பங்களிக்கின்றன.

இந்நகர மக்கள் பல்வேறு உள்ளூர் மற்றும் வெளியூர் தொழில்துறைகளில் பணியாற்றுகிறார்கள்.

இந்நகரம், 2008 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட வேலூர் மாநகராட்சி மூலம் ஆளப்படுகிறது.

இந்நகரம் இரயில் போக்குவரத்துடன் இணைக்கப்பட்டிருந்தாலும், சாலைப் போக்குவரத்தே முக்கியமான போக்குவரத்து முறையாக இருக்கிறது.

முதல் இந்தி தேசியக் கொடியானது வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தத்தில் நெய்யப்பட்டது.

2008, ஆகஸ்ட், 05 – அன்று, வேலூர் மாநகராட்சியாக தமிழகத்தின் அப்போதைய முதல்வர் கருணாநிதி அவர்களால் அறிவிக்கப்பட்டது.

2019, நவம்பர், 28 – தமிழ்நாட்டின் 35 ஆவது மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டம், வேலூரிலிருந்து பிரிக்கப்பட்டது.

2019, நவம்பர், 28 – தமிழ்நாட்டின் 36 ஆவது மாவட்டமாக ராண்ப்பேட்டை மாவட்டம், வேலூரிலிருந்து பிரிக்கப்பட்டது.

2020 ஆம் ஆண்டுக்கான, உள்ளாட்சி அமைப்புகளில் சிறந்த மாநகராட்சிக்கான விருது வேலூர் மாநகராட்சிக்கு வழங்கப்பட்டது.



அணைகள்


ஆறுகள்