வௌவால் (Bat) பறக்கவல்ல முதுகெலும்புள்ள (முதுகெலும்பி) பாலூட்டி ஆகும்.

பாலூட்டிகளில் பறக்கவல்ல ஒரே விலங்கு வௌவால்தான்.

இவ்விலங்கை வவ்வால் என்றும் வாவல் என்றும் அழைப்பர்.

இவ்வௌவால் இனத்தில் 1000க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன.

பாலூட்டிகளிலேயே இவை மட்டுமே 20% ஆக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

உயிரினங்களைத் தேர்ந்து வகைப்படுத்தும் அறிவியல் துறையாளர்களான வகையியலாளர்கள் வௌவால் இனத்தை கைச்சிறகிகள் எனப்படும் Chiroptera என்னும் வரிசையில் வைத்துள்ளார்கள்.

இவ்வௌவால்கள் பெரும்பாலும் (சுமார் 70%) எலி போன்ற சிறு முகம் (குறுமுகம்) உடையனவாகவும் பூச்சிகளையுண்பனவாகவும் உள்ளன.

வௌவால்கள் பகல் பொழுது முழுவதும் தலைகீழாக தொங்கிக்கொண்டிருக்கும்.

சூரியன் மறைந்த பின்னர் இவை உலவ ஆரம்பிக்கும்.

இரவு நேரங்களிலேயே இவை உணவு உண்ணும்.

வௌவால்கள் நரியின் முகத்தோடும், சிகப்பு கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும்,அதன் இறக்கைகள் வழு வழுவென காட்சி அளிக்கும்.

இட மெய்மிகள் (Place cells) என அழைக்கப்படுகிற நரம்பணுவே வெளவாலின் முப்பரிமாண காட்சிகளை காணச்செய்கிறது என ஒரு ஆய்வு பரிந்துரைக்கிறது.

பழந்திண்ணி வௌவால்கள், பறக்கும் நரி என்று அழைக்கப்படுகிறது.

தாவரவியல்


மனித உடல் பாகங்கள்