1521 ஆம் ஆண்டில், மெக்சிக்கோவின் பகுதிகளை ஸ்பெயின் கைப்பற்றித் தனது தளமான மெக்சிக்கோ-தெனோச்தித்லானில் இருந்து குடியேற்றங்களை நிறுவியது.
1521 -ஆம் ஆண்டு, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த, ஃபெர்டினான்ட் மேகலன் என்பவர், பசிபிக் பெருங்கடலுக்கு இப்பெயரை வைத்தார்.
1581, ஜூலை, 26, அன்று ஹாப்ஸ்பர்க் (ஸ்பெயின்) பேரரசிடமிருந்து விடுதலை நெதர்லாந்து அடைந்தது.
1810, செப்டம்பர், 16 – மெக்சிகோ தன்னை ஸ்பெயினிடமிருந்து விடுதலை அடைந்ததாக அறிவித்தது.
1898, ஜீன், 12, அன்று ஸ்பெயினிடமிருந்து, பிலிப்பைன்ஸ் சுதந்திரப்பிரகடனம் செய்துகொண்டது.
2021, நவம்பர், 27 – அன்று, ஸ்பெயினில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் நீரில் மூழ்கிய 5 கிராமங்கள் நீர் வற்றியதால் மீண்டும் தோன்றியுள்ளன. லிமியா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையின் நீர் மின் நிலையம், அணையின் மதகுகளை 1992 ஆம் ஆண்டில் மூடியதால் நீர் தேங்கி Ourense மாகாணத்தின் Aceredo உள்ளிட்ட 5 கிராமங்கள் நீரில் மூழ்கின.
உலக சுற்றுலா நிறுவனத்தின் (WTO) ஆதரவில் 1980 ஆண்டிலிருந்து செப்டம்பர் 27 ஆம் தேதி உலகெங்கம் உலக சுற்றுலா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஸ்பெயினில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா நிறுவனத்தின் மூன்வது பொது அவைக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
ஸ்பெயின் நாட்டில் செய்தித் தாள்கள் துணிகளில் அச்சிடப்படுகின்றன.