ஐதராபாத் (Hyderabad) தென்னிந்தியாவில் உள்ள தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரமும், ஆந்திரா மாநிலத்தின் உரிமைப்படியான தலைநகரமும் ஆகும்.

இந்நகரம் “முத்துக்களின் நகரம்” என்றும் நிஜாம்களின் நகரம் என்றும் புகழ்பெற்றது.

ஐதராபாத்தின் மக்கள் தொகை 4 மில்லியனுக்கும் மேற்பட்டதாகும். நகரத்தின் பரப்பளவு, மக்கள் தொகை, வளர்ச்சி ஆகியவற்றின் தாக்கத்தின் அடிப்படையில் ஐதராபாத் -1 நகரம் என்று வகைப்பட்டுள்ளது.

இந்தியாவின் தலை சிறந்த தகவல் தொழில்நுட்பக்கூடங்களை உள்ளடக்கி ஐதராபாத் தனிப்பெரும் வளர்ச்சியடைந்துள்ளது.

உலகின் மிகப்பெரிய திரைப்படப் படப்பிடிப்பகமான ராமோஜி திரைப்பட நகரம், அத்துடன் இந்தியாவின் 3ம் இடம் வகிக்கும் பெரிய தொழிற்சாலையான டோலிவுட் எனப் பெயர் பெற்ற ஆந்திரத் திரைப்படத்துறை ஆகியவை இங்கு அமைந்துள்ளன.

இந்நகரம் மிகையான விளையாட்டு அரங்கங்களுடன் பற்பல விளையாட்டுத் திடல்களுடன் கூடிய விளையாட்டுப் புகலிடமாகவும் அமைந்துள்ளது.

அனைத்துலக அளவிலும் தேசிய அளவிலும் போட்டிகள் இங்கு மிகுதியான அளவில் நடக்கின்றன. இந்நகரம் இந்திய பிரீமியர் லீகின் ஓர் முன்னணி அணியான டெக்கான் சார்ஜர்சின் தாயகமாகவும் விளங்குகிறது.

ஐதராபாத்தில் வசிக்கும் மக்களை ஐதராபாதி என்று அழைக்கின்றனர். இந்நகரம் பழமையுடன் புதுமையும் இணைந்த நவீன நகரமாக விளங்குகிறது.

இந்தியாவின் முதல் நாய் பூங்கா ஹைதராபாத்தில் அமைந்துள்ளது.


இந்திய அரசு


மாநிலங்கள்


யூனியன் பிரதேசங்கள்


முக்கிய நகரங்கள்


இந்திய ஆறுகள்