பக்சார் போரின் முடிவில் 12 ஆகஸ்டு 1765 அன்று முகலாயப் பேரரசர் ஷா ஆலமிற்கும், கிழக்கிந்திய கம்பெனிக்கும் இடையே அலகாபாத் ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தப்படி, வங்காளம், பிகார் மற்றும் ஒடிசா உள்ளிட்ட கிழக்கிந்தியாவின் மக்களிடம் கிழக்கிந்திய கம்பெனி நேரடியாக வரி வசூலிக்கும் உரிமை பெற்றது. மேலும் அவாத் நவாப் சுஜா உத்-தவுலா அலகாபாத் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, கம்பனியாருடன் அமைதி ஏற்படுத்திக் கொண்டார்.

வங்காளத்தின் கவர்னராக இராபர்ட் கிளைவ் பொறுப்பேற்றார்.