ஜனவரி, 04 – அன்று, வில்லியம் மெக்டோனால்ட், மெக்டோனால்ட் தீவுகளை கண்டுபிடித்தார்.

மே, 20 – அன்று, அயோத்திதாசர் அவர்கள் சென்னையில் பிறந்தார். இவரது இயற்பெயர் காத்தவராயன் என்பதாகும்.

சீனாவில் தைப்பிங் கலகம் நடைபெற்றது.

இந்தியாவின் முதல் சணல் ஆலை, ஆங்கிலேயரான ஜார்ஜ் ஆக்லாண்டு என்பவரால் கொல்கத்தாவிற்கு அருகில் உள்ள ரிஷ்ரா என்னுமிடத்தில் தொடங்கப்பட்டது. தேசிய சணல் வாரியத்தில் தலைமையிடம் கொல்கத்தாவில் அமைந்துள்ளது. இந்தியா சணல் உற்பத்தியில் முதலிடத்தில் அமைந்துள்ளது.

இங்கிலாந்தின் லண்டனைச் சேர்ந்த ஜான் ஸ்னோ என்ற மருத்துவர் லண்டன் நகரம் முழுவதும் காலரா பரவியிருந்து இடங்களுக்கான முதல் கருத்துசார் நிலவரைபடத்தை வரைந்து ஆய்வு செய்தார்.