கி.பி. 1856ஜூலை, 01 – சென்னையில் முதன் முதலில் (ராயபுரத்திலிருந்து வாலாஜா ரோடு வரை) ரயில் சேவை தொடங்கப்பட்டது.

1856 முதல் 1862 வரை கானிங் பிரபு, பிரிட்டிஷ் இந்தியாவின் தலைமை ஆளுநராக பணியாற்றினார்.

கானிங் பிரபு, பொது இராணுவச் சட்டத்தை கொண்டுவந்தார் (The General Service Enlistment). இதன்படி தேவை ஏற்பட்டால் இந்திய சிப்பாய்கள் கடல் கடந்தும் போரில் ஈடுபட வேண்டும் என்பதாகும்.

சென்னைக்கும் ஆர்காட்டிற்கும் இடையே இருப்பப்பாதை போடப்பட்டது.

இந்து விதவை மறுமணம் சட்பூர்வமாக அனுமதிக்கப்பட்டது.

பிரித்தானிய இந்திய அலுவலகம் சிங்கப்பூரை ஆட்சி செய்தது.