1858 ஆம் ஆண்டு, ஏப்ரல் 23 அன்று, பெண்ணுரிமைப் போராளியான பண்டித ராமாபாய் அவர்கள் பிறந்தார்.

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர் சர் ஜகதீஷ் சந்திர போஸ் பிறந்தார்.

கானிங் பிரபு ஆளுநராக இருந்தபொழுது, பிரித்தானிய இந்தியாவின் தலைநகரம் கல்கத்தாவிலிருந்து தில்லிக்கு மாற்றப்பட்டது.

1858 ஆம் ஆண்டு நவம்பர் 1 – ஆம் தேதி பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி தலைமை ஆளுநரும், முதலாம் வைசிராயாயுமான கானிங் பிரபு அலகாபாத்தில் நடைபெற்ற மாபெரும் கூட்டத்தில் விக்டோரியா மகாராணியின் பேரறிக்கையை வெளியிட்டார். அது இந்திய மக்களின் மகாசாசனம் (உரிமை சாசனம்) என்றழைக்கப்பட்டது.

சென்னைப் பல்கலைக்கழகம், பம்பாய் பல்கலைக்கழகம் மற்றும் கல்கத்தா பல்கலைக்கழகம் ஆகியவைகள் கானிங் பிரபு, ஆளுநராக இருந்தபோது நிறுவப்பட்டது.

பிரித்தானிய இந்தியா அரசின் நிர்வாகத்தை மேம்படுத்த இந்திய அரசுச் சட்டம், 1858 ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தில் கானிங் பிரபு, ஆளுநராக இருந்தபோது நிறைவேற்றப்பட்டது.

ஜூன் 20, 1858 இல் குவாலியர் நகரின் வீழ்ச்சியுடன் சிப்பாய் கலகம் முடிவுக்கு வந்தது.

சிப்பாய் கலகம் நடைபெற்றதன் விளைவாக இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து இங்கிலாந்து அரசிக்கு 1858 ஆம் ஆண்டு அதிகாரம் மாற்றப்பட்டது.

பிரிட்டிஷ் அரசு இந்திய நிலப்பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வரை, இந்தியாவில் கிழக்கிந்திய வணிகக் குழுவின் ஆட்சியே நடைப்பெற்றது.

குடிமராமரத்து சட்டம் இயற்றப்பட்டது.