ஜனவரி, 01 – மதராஸ் மாகாணத்திற்கு தண்ணீரை திருப்பி விவசாயப்பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டு ‘பெரியாறு திட்டத்தின்‘ கீழ் அப்போதைய சென்னை மாகாணத்திற்கும், திருவிதாங்கூர் அரசருக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. அப்பொழுது கையொப்பமிடப்பட்ட இந்த பெரியாறு குத்தகை ஒப்பந்தந்தின்படி, ஒரு ஏக்கர் நிலத்திற்கு ஐந்து ரூபாய் ஆண்டு வாடகை என்ற அடிப்படையில் 999 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது.

மே, 25 – ஆம் நாள், ராஷ் பிஹாரி போஸ் அவர்கள், மேற்கு வங்க மாநிலத்தில் , பரத்வான் மாவட்டத்தில் சுபல்தகா கிராமத்தில் பிறந்தார்.

ஜுலை, 30 – ஆம் நாள், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அவர்கள் பிறந்தார்.

டிசம்பர் 27 ல் – இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் இரண்டாவது பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் 436 பேர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் தலைவராக தாதாபாய் நௌரோஜி அறிவிக்கப்பட்டார்.

ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் இயற்கை எய்தினார்.

கனடாவைசை சேர்ந்த ஜார்ஜ் உக்லோ போப் என்பவர் திருக்குறளை Sacred Kural என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.