பிப்ரவரி, 10 – மடகாஸ்கரில் மதச்சுதந்திரம் அறிவிக்கப்பட்டது.

ஏப்ரல், 26 – அன்று தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை இயற்றிய மனோன்மணீயம் பெ. சுந்தரனார் அவர்கள் இறந்தார்.

மே, 1 அன்று, இராமகிருஷ்ண இயக்கம், இராமகிருஷ்ண பரமஹம்சரின் பெயரால், சுவாமி விவேகானந்தரால் ஏற்படுத்தப்பட்டது.

ஆகஸ்ட், 20 ஆம் தேதி – அனோபிலஸ் என்ற கொசு மலேரியா காய்ச்சலையும், ஏடிஸ் ஏஜிட்டி என்ற கொசு டெங்கு மற்றும் சிக்கன்குனியா நோயையும், கியூலக்ஸ் என்ற கொசு யானைக்கால் நோயையும், ஜே.இ. என்ற கொசு ஜப்பானிய மூளை காய்ச்சலையும் பரப்புகிறது. என சர் ரெனால்ட் ராஸ் என்ற விஞ்ஞானி கண்டுபிடித்தார். அந்நாளே கொசு ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

ஸ்வீடன் நாட்டு ரிக்ஸ் வங்கி பணத்தை வெளியிடுவதற்கான முழு உரிமையைப் பெற்றது.

இரட்டைச்சுவர் கண்ணாடிக் குடுவையில், வெற்றிடத்தோடு, மேலும் சில மாறுதல்களைச் செய்தபோது, குளிர் நிலையில் மட்டுமல்ல வெப்பநிலையிலும் பொருட்களை பாதுகாக்க முடியும் என ஜேம்ஸ் திவார் கண்டறிந்தார்.