ஜுன், 1 – அன்று வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்கள் முதல் முதலாக எஸ்.எஸ்.காலியா என்ற சுதேசி கப்பலை வெற்றிகரமாக இயக்கினார்.

ஜூன், 10 – அன்று முதன் முதலில் வண்ணப் புகைப்படம் அறிமுகப்படுத்தப்பட்டது.

செப்டம்பர், 26 – அன்று நியூசிலாந்து, பிடிட்டிஷ் அரசிடமிருந்து விடுதலை பெற்றது.

ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள ஜாம்ஷெட்பூரில் டாடா இரும்பு எஃகு தொழிற்சாலை தொடங்கப்பட்டது.

சென்னை பல்கலைக்கழக நூலகம் உருவாக்கப்பட்டது.

சூரத் நகரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் அன்னி பெசண்ட் கலந்துகொண்டார்.

சூரத் மாநாட்டில் மிதவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் பூசல் ஏற்பட்டு கட்சி பிளவுற்றதைப் போல் இம்முறை நிகழ இரு தரப்பினரும் விரும்பவில்லை. அதனால் வெளிப்படையாக பிரிந்து செல்லாமல் ஒரு சமரசம் செய்து கொண்டனர். அதன்படி சுயாட்சிக் கட்சி ஆதரவாளர்கள் காங்கிரசு உறுப்பினர்களாக இருந்து கொண்டே சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடலாம் ஆனால் வெற்றி பெற்றால் ஆட்சிப் பொறுப்பை ஏற்கக் கூடாது என்று முடிவானது. அதன்படி சுயாட்சிக் கட்சி 1923 முதல் மாநில மற்றும் மத்திய சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டது.

இந்திய தேசிய காங்கிரஸில் தீவிரபோக்குடையோர், மிதபோக்குள்ளோர் என 2 குழுக்கள் உருவாகின. தீவிரபோக்குடையோர் பால கங்காதர திலகர் தலைமையிலும், மிதபோக்குடையோர் கோபால கிருஷ்ண கோகலே தலைமையிலும் இயங்கினர்.

ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல், ஆர்டர் ஆஃப் மெரிட் என்ற விருதினை பெற்றார். இவர் இவ்விருதினைப் பெற்ற முதல் பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது.

லியோ பேக்லாண்டு என்பவர் மின் சுவிச்சுகள் செய்ய செயற்கை வேதிப் பொருள்கள் கொண்டு பிளாஸ்டிக் என்ற பொருளை உருவாக்கினார்.