அக்டோபர், 5 – போர்ச்சுகல் குடியரசானது.

அக்டோபர், 19 – அன்று இந்திய வானியல் ஆராய்ச்சியாளரான சுப்பிரமணியன் சந்திரசேகர் அவர்கள் பாகிஸ்தானில் லாகூரில் பிறந்தார்.

இந்திய பத்திரிக்கைகள் சட்டம் கொண்டுவரப்பட்டது.

நிர்வாக வசதிக்காக மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலிருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு இராமநாதபுரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

கோபாலகிருஷ்ன கோகலே அவர்கள் அனைத்து இந்திய குழந்தைகள் அனைவருக்கும் கட்டாய இலவச கல்வியை முன்மொழிந்து சட்டம் இயற்ற ஆங்கிலேயரிடம் கோரிக்கை வைத்தார்.

அன்னை தெரேசா அவர்கள் 1910 ஆகஸ்டு 26 அன்று ஓட்டோமான் பேரரசின் அஸ்கப் (தற்போது மாக்கடோனியக் குடியரசின் ஸ்கோப்ஜே) இல் பிறந்தார். ஆகஸ்டு 26 ஆம் தேதி பிறந்த போதிலும், அவர் திருமுழுக்குப் பெற்ற ஆகஸ்டு 27 ஆம் தேதியையே தனது உண்மைப் பிறந்தநாளாகக் கருதினார்.

தென்னாப்பிரிக்காவில், பிரித்தானியர்கள் போயர்களை தோற்கடித்தனர் என்றாலும், அவர்கள் பிரித்தானிய ஆட்சிப்பகுதியாக, தென்னாப்பிரிக்காவிற்கு நிபந்தனைக்குட்பட்ட விடுதலையை வழங்கினர்.

மெக்சிகோ நாட்டில் நிலவிய சர்வாதிகாரம், மெக்சிக்கப் புரட்சிக்கு வித்திட்டது.