பிப்ரவரி, 18 – அன்று, முதலாவது அதிகாரபூர்வமான விமான அஞ்சல் சேவை இந்தியாவில் அலகாபாத்தில் ஆரம்பமானது.

ஜூன், 17 – காலை 10.30 மணிக்கு கொடைக்கானல் செல்வதற்கு குடும்பத்தோடு மணியாச்சி இரயில் நிலையத்தில் காத்திருந்த ஆஷ்துரையை, அங்கு மறைந்திருந்த இந்திய விடுதலை போராட்ட வீரர் வாஞ்சிநாதன் அவர்கள் சுட்டுக்கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டார்.

டிசம்பர், 27 – அன்று, கொல்கத்தாவில், ஜன கன மன பாடல் முதல் முறை பாடப்பட்டது.

வங்காள பிரிவினை ரத்து செய்யப்பட்டது.

ஆஷ் துரை படுகொலை செய்யப்பட்டார்.

கர்சன் பிரபுவிற்கு பின் வந்த இந்தியத் தலைமை ஆளுநர் மிண்டோ பிரபு 1905ல் பிரிக்கப்பட்ட வங்காள மாகாணத்தை மீண்டும் 1911ல் ஒன்றிணைத்தார்.

மேரி கியூரி அவர்கள் வேதியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.

திருப்பெரும்புதூர் முழுமையாக மேம்படுத்தப்பட்ட துணை வட்டமாக ஆக்கப்பட்டு 4-வது வருவாய் கோட்டமாக காஞ்சிபுரத்தை தலைமையகமாக கொண்டு காஞ்சிபுரம் மற்றும் திருப்பெரும்புதூர் வட்டங்கள் உருவாக்கப்பட்டது.