பிப்ரவரி, 22 – தில்லையாடி வள்ளியம்மை அவர்கள் தனது 16 ஆவது வயதில் உயிர் நீத்தார்.

ஆகஸ்ட், 05 – அன்று உலகின் முதல் சிவப்பு மற்றும் பச்சை வண்ண போக்குவரத்து விளக்கு (Traffic Light) அமெரிக்காவிலுள்ள Cleveland என்னுமிடத்தில் நிறுவப்பட்டது.

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியில், வெளிநாட்டினரின் நுழைவுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்கும் வெளிநாட்டினரின் அவசரச் சட்டம் இயற்றப்பட்டது.

தென் நைஜீரியா மற்றும் வடக்கு நைஜீரியா இணைக்கப்பட்டன.

முதல் உலகப் போர் ஐரோப்பாவில் தொடங்கியது.

பெண்களுக்காக இராணிமேரி கல்லூரி தொடங்கப்பட்டது.

அனைத்திந்திய இந்து மகா சபை தோற்றுவிக்கப்பட்டது.

அன்னி பெசண்ட் சென்னையில் இருந்து நியூ இந்தியா என்ற நாளேடு ஒன்றை ஆரம்பித்து நடத்தினார்.

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பாம்பன் பாலமானது இந்தியாவில் திறக்கப்பட்ட முதல் கடல் பாலம் ஆகும்.