பிப்ரவரி 5, உத்திரப் பிரதேசத்தில் சௌரி சௌரா என்ற இடத்தில் விடுதலை இயக்கத்தினருக்கும் காவல்துறையினருக்கும் மோதல்கள் ஏற்பட்டன. காவல் துறையினரின் செயல்பாட்டால் சில விடுதலை இயக்கத்தினர் மரணமடைந்தனர். இதனால் கோபம் கொண்ட மற்றவர்கள் காவல் நிலையத்தைத் தீயிட்டுக் கொளுத்தினர். இதில் 22 காவல்துறையினர் கொல்லப்பட்டனர். வன்முறை இந்தியாவின் வேறு சில பகுதிகளுக்கும் பரவியது. அறவழியில் நடந்து வந்த இயக்கம் வன்முறைப் பாதையில் செல்வதைக் கண்ட காந்தி அதிர்ச்சியடைந்தார். ஒத்துழையாமை இயக்கம் வன்முறை இயக்கமாக மாறுவதைத் தடுக்க, அதனை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தார். வன்முறை ஓயும் வரை மூன்று வாரங்கள் உண்ணாநிலைப் போராட்டமொன்றை நடத்தினார். இதனால் ஒத்துழையாமை இயக்கம் வலுவிழந்து நின்று போனது.
ஏப்ரல் 05 ஆம் நாள், பெண்ணுரிமைப் போராளியான பண்டித ராமாபாய் அவர்கள் இறந்தார்.
செப்டம்ர், 13 – அன்று ஆப்ரிக்காவிலுள்ள லிபியவில் காற்றின் வெப்பநிலையனது 59 டிகிரி செல்சியஸ் என்று கணிக்கப்பட்டு இருந்தது.
அக்டோபர், 24 – முசோலினி (Benito Mussolini) உதவியுடன் ரோம் நகரை நோக்கி ஒரு பேரணி நடத்த புரட்சிப்படையினரால் திட்டமிடப்பட்டு இருந்தது, ஆனால், ரோம் சரண்டைந்ததைத் தொடர்ந்து, அக்டோபர், 28 அன்று, முசோலினி இத்தாலியின் சர்வாதிகாரி ஆனார்.
R.D. பானர்ஜி என்பவரால் மொஹன்சதாரோ நகரம் கண்டுபிடிக்கப்பட்டது.
1919 ஆம் ஆண்டு ரௌலட் சட்டம் பிறப்பித்து மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் இச்சட்டம் கொடுமையானது என்பதை ஏற்ற காலனிய அரசு மார்ச் 1922ல் இதனைத் திரும்பப் பெற்றுக் கொண்டது.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் ‘மனோன்மணியம் மறுபிறப்பு’ என்ற திறனாய்வுக் கட்டுரையை எழுதினார்.
மகாத்மா காந்தியாலும், இந்திய தேசிய காங்கிரசாலும் முன்னெடுக்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கம் செப்டம்பர் 1920 இல் தொடங்கி பிப்ரவரி 1922 வரை தொடர்ந்தது.
சுயாட்சிக் கட்சி (Swaraj Party) அல்லது சுவராஜ் கட்சி அல்லது சுவராஜ்ய கட்சி, சுயராஜ்ய கட்சி என்பது 1922 – 1935 காலகட்டத்தில் இந்தியாவில் செயல்பட்ட ஓர் அரசியல் கட்சி.
அணுக்களின் கட்டமைப்புக்கும், குவாண்டம் இயக்கவியலுக்கும் அடிப்படை விதிகளை உருவாக்கினார். இதற்காக இவ்வாண்டு நோபல் பரிசினை நீல்ஸ் போர் பெற்றார்.
அயர்லாந்து தனிநாடாகப் பிரிந்தாலும் 1927 சட்டத்தின்படி வடக்கு அயர்லாந்தின் ஆறு கௌன்ட்டிகள் ஐக்கிய இராச்சியத்துடன் இணைந்து தற்போதுள்ள பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்துகளின் ஐக்கிய இராச்சியம் நிலைபெற்றது.
எகிப்து நாட்டிற்கு விடுதலை அளிக்கப்பட்டது.
கி.பி. 01 முதல் கி.பி 1000 ஆம் ஆண்டு வரை
கி.பி. 1001 முதல் கி.பி 1100 ஆம் ஆண்டு வரை
கி.பி. 1101 முதல் கி.பி 1400 ஆம் ஆண்டு வரை
கி.பி. 1401 முதல் கி.பி 1500 ஆம் ஆண்டு வரை
கி.பி. 1501 முதல் கி.பி 1600 ஆம் ஆண்டு வரை
கி.பி. 1601 முதல் கி.பி 1700 ஆம் ஆண்டு வரை
கி.பி. 1701 முதல் கி.பி 1800 ஆம் ஆண்டு வரை
கி.பி. 1801 முதல் கி.பி 1900 ஆம் ஆண்டு வரை
கி.பி. 1901 முதல் கி.பி 2000 ஆம் ஆண்டு வரை
2001 ஆம் ஆண்டு முதல் ….